இன்றைய புனிதர்
புனித ஜோன் ஆஃப் ஆர்க்
திரு. பிலோமி அலெக்ஸ்
பிரான்ஸ் நாட்டில் டோம் ரெமி என்னுமிடத்தில் வாழ்ந்த ஜேக்குவஸ், இஸபெல்லா பெற்றோருக்கு கி.பி 1412 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் நாள் பிறந்தார் ஜோன் ஆஃப் ஆர்க். சிறு வயது முதல் செபத்திலும், புண்ணிய செயல்கள் புரிவதிலும் சிறந்திருந்த இவர் தன் 13 வது வயதில் புனித மார்க்கிரேட் குரலினை கேட்டார். கி.பி 1428 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் பிரான்ஸ் நாட்டினை தாக்க வரப்போவதினை காட்சியாக கண்ட, ஜோன் ஆஃப் ஆர்க், தன் வீட்டை விட்டு வெளியேறி அரசர் 7 ஆம் சார்லஸின் போர் படைகளுக்கு தலைமையேற்று படைவீரர்களை வழிநடத்தினார். கி.பி 1429 மே 8 ஆம் நாள் தன் 18 வது வயதில் பிரான்ஸ் நாட்டின் ஆர்ல்யன்ஸ் என்னுமிடத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து, போர்புரிந்த ஜோன் ஆஃப் ஆர்க் துனிச்சலோடு படையினை வழிநடத்தி ஆங்கிலேயரை தோற்கடித்தார். தன்னை இறைவழிநடத்துகிறார் தனக்கான வீரத்தினையும் திறமையினையும் இறைவன் தருகிறார் என்று கூறிய ஜோன் ஆஃப் ஆர்க் அரசர் 7 ஆம் சார்லÞ பிரான்ஸ் நாட்டின் அரசராக காரணமாக அமைந்தார்.
பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு ஆண்டவரின் நற்செய்தியினை அறிவித்து அவர்களை கிறிÞதுவத்தினை பின்பற்ற செய்த இவர் 1430 ஆம் ஆண்டு மே 23 ஆம் நாள் மார்கண்டயே படைவீரர்களால் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட ஜோன் ஆஃப் ஆர்க் கி.பி 1431 ஆம் ஆண்டு மே 30 ஆம் நாள் தன் 19 வது வயதில் தீயிலிட்டு படுகொலை செய்யப்பட்டார். சிறை வாழ்க்கையின் போது எந்நேரமும் ஆண்டவரிடம் முழந்தாள்படியிட்டு மக்களுக்காகவும் உலக சமாதானத்திற்காகவும் செபித்த ஜோன் ஆஃப் ஆர்க்-னை திருத்தந்தை 15 ஆம் ஆசிர்வாதப்பர் 1920 ஆம் ஆண்டு மே 16 ஆம் நாள் புனிதராக உயர்த்தி பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலராக அறிவித்தார்.
இன்று, புனித ஜோன் ஆஃப் ஆர்க் திருவிழாவினை கொண்டாடுகின்ற நாம் போரின்போது உடல் ஊனமுற்ற படைவீரருக்காகவும் அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிப்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்