தேடுதல்

Shio III Shio III  (©Shio III)

ஜார்ஜிய மரபுவழித் திருஅவையின் புதிய முதுபெரும்தந்தையாக மூன்றாம் ஷியோ தேர்வு!

ஜார்ஜிய மரபுவழித் திருஅவையின் புதிய தலைவராக (கத்தோலிக்கோஸ் முதுபெரும்தந்தை) மூன்றாம் ஷியோ 2026, மே 11 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

மே 11, திங்களன்று, ஜார்ஜிய மரபுவழித் திருஅவையின் (Georgian Orthodox Church) புதிய கத்தோலிக்கோஸ் முதுபெரும்தந்தை (Catholicos-Patriarch) மூன்றாம் ஷியோ (Shio III - இயற்பெயர்: எலிஸ்பார் முஜிரி) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆசீர்வாதத்திற்குரிய மூன்றாம் ஷியோ அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அனைத்து ஜார்ஜியாவின் கத்தோலிக்கோஸ்-பேட்ரியர்க், மட்ச்கேட்டா-திபிலீசியின் பேராயர், மற்றும் அப்காசியா-பிச்விந்தாவின் மெட்ரோபாலிட்டன் ஆகிய உயர் பதவிகளை ஏற்றுக்கொள்கிறார்.

இந்தத் தேர்தலை முன்னிட்டு,  கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்கள், புதிய முதுபெரும் தந்தைக்கு வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'இயேசு கிறிஸ்துவின் மந்தையை மேய்ப்பதற்கான' புதிய முதுபெரும் தந்தையின் அழைப்பின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அவரது இந்தப் பணி 'நமது திருஅவைகளுக்கிடையிலான ஒற்றுமை, அன்பு மற்றும் சகோதரத்துவ உரையாடலை' வலுப்படுத்தும் என்றும் அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 மே 2026, 15:27