மனுவுரு எடுத்ததில் இயேசுவின் பேரன்பு வெளிப்படுகிறது

இயேசு இவ்வுலகை விட்டு மேலெழும்பிச் சென்றதை நாம் ஏன் கொண்டாடுகிறோம், அவர் தற்போது என்னச் செய்து கொண்டிருக்கிறார் என்ற இரு கேள்விகள்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இறைமகன் விண்ணகத்திற்கு எழுந்துச் சென்ற திருவிழாவன்று, மனிதகுலத்தை இயேசு வானகத்திற்கு எடுத்துச் சென்றதுடன், நாம் வானுலகில் இறைத்தந்தையின் குழந்தைகளாக என்றென்றும் வாழ்வதற்கான வழியைத் திறந்துள்ளார் என ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 21, ஞாயிற்றுக்கிழமை திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட இயேசு விண்ணகத்திற்கு எழுந்துச் சென்ற திருவிழாவையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலியுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு இவ்வுலகை விட்டு மேலெழும்பிச் சென்றதை நாம் ஏன் கொண்டாடுகிறோம், அவர் தற்போது என்னச் செய்து கொண்டிருக்கிறார் என்ற இரு கருத்துக்கள் குறித்து தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

மண்ணில் மனுவுரு எடுத்த இறைமகன் அதே உருவுடன் இறைத்தந்தையை நோக்கிச் சென்றதன்வழி, நம் மனித குலத்தையும் விண்ணகம் நோக்கி எடுத்துச் சென்றுள்ளார் என்ற  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனுவுரு எடுத்ததில் அவரின் பேரன்பு வெளிப்படுகிறது என்றார்.

விண்ணகத்திற்கு ஏறிச் சென்ற இறைமகன் இயேசு, இறைத்தந்தையின் அருகில் அமர்ந்துகொண்டு நமக்காக என்றும் பரிந்துரை செய்துகொண்டேயிருக்கிறார் என்ற திருத்தந்தை, இதன்வழி இறைமகன் இயேசு எப்போதும் நம்மருகிலேயே இருக்கிறார் என மேலும் கூறினார்.

இறைத்தந்தையின் முன்னிலையில் நமக்காக இயேசு தொடர்ந்து பரிந்துரைச் செய்துகொண்டிருப்பதால், நாம் நம்பிக்கை இழக்காமலும், மனம்தளராமலும இருக்க நம் விசுவாசம் நமக்கு உதவுகிறது என எடுத்துரைத்து, அன்னைமரியின் பரிந்துரையையும் வேண்டி தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையை நிறைவுச் செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 மே 2023, 14:28

அல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன?

அல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில்  ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater,  l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).

இது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா  நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..

அச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .

ஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு  கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள  மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.

ஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில்  திருத்தந்தை  பிரான்சிஸ்  அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்

 "... மரியா  அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின்  மகிழ்ச்சியின் ஒரு பிரதிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால்,  மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில்,  இந்த செபத்தை நாம் செபிப்போம்.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >