தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

கிறிஸ்துவின் அன்பால் ஈர்க்கப்பட்டவர் புனித வின்சென்ட் தெ பவுல்

கடவுளின் பணி எப்போதும் சகோதரத்துவ உறவுகளையும், சமூக நட்பையும் வெளிப்படுத்துகின்றது

ஜான் போஸ்கோ - வத்திக்கான்

தேவையிலிருக்கும் நம் சகோதர சகோதரிகளை நெருங்குவதற்கு புனித வின்சென்ட் தெ பவுலின் முன்மாதிரி நம்மைத் தூண்டட்டும் என்றும், கிறிஸ்துவின் அன்பால் ஈர்க்கப்பட்டு, தன்னையே அவருக்காக அர்ப்பணித்தவர் அவர் என்றும் தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 27 புதன்கிழமை திருஅவை நினைவுகூரும் புனித வின்சென்ட் தெ பவுல்  கிறிஸ்துவின் மீதுள்ள அன்பால் ஈர்க்கப்பட்டு, ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களின் பணிக்காக தன்னையே அர்ப்பணித்தவர் என்றும், அவரது விழாவை நினைவு கூரும் இந்நாளில்  தேவையிலிருக்கும் நம் சகோதர சகோதரிகளை நெருங்கி செல்வதற்கு அவருடைய முன்மாதிரிகையான வாழ்வு நம்மைத் தூண்டட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுளின் பணி எப்போதும் சகோதரத்துவ உறவுகளையும், சமூக நட்பையும் வெளிப்படுத்துகின்றது என்று தன் இரண்டாவது டுவிட்டர் குறுஞ்செய்தில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவை அல்லது சமூக பொறுப்புகளில் முயற்சியுடன் பணியாற்றும் ஆண்கள் மற்றும் பெண்களின் கண்கள், கரங்கள், பாதங்கள், இதயங்கள் என அனைத்தும் மனித உடன் பிறந்த உணர்வின் வழியாக கடந்து செல்கிறது என்று தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

27 September 2023, 15:48