கிறிஸ்தவ ஒன்றிப்பு நெருக்கத்தை ஏற்படுத்தட்டும்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தை ஆறாம் பவுல் மற்றும் முதுபெரும் தந்தை Athenagoras இருவரின் எடுத்துக்காட்டு, இறைவனின் சீடர்களிடையே முழு ஒற்றுமையை மீட்டெடுப்பதற்கான அனைத்து உண்மையான பாதைகளும் தனிப்பட்ட தொடர்பு மற்றும் ஒன்றாக செலவழித்த நேரத்தால் வகைப்படுத்தப்படுகின்றன என்பதைக் காட்டுகிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்
நவம்பர் 30, இவ்வியாழனன்று, திருத்தூதரான புனித அந்திரேயாவின் திருநாள் சிறப்பிக்கப்படும்வேளை, இவரின் வழித்தோன்றலாக இன்று பணியாற்றும் கான்ஸ்தாந்திநோபுளின் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, முதலாம் பர்த்தலோமேயு அவர்களுக்கு எழுதியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு உரைத்துள்ளார் திருத்தந்தை.
இன்றையத் திருவிழா ஓர் உண்மையான வரலாற்று நிகழ்வின் நினைவாக உள்ளது என்றும் அதுவே, ஜனவரி 1964 இல் எருசலேமில் திருத்தந்தை ஆறாம் பவுல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை Athenagoras இடையேயான சந்திப்பு என்றும் ஏறத்தாழ பத்தாயிரமாண்டுகளாக இருந்த தவறான புரிதல், அவநம்பிக்கை மற்றும் பகைமையின் தடையை உடைப்பதில் அந்தச் சந்திப்பு ஒரு முக்கியமான படியாக அமைந்தது என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
இன்று நாம் அந்த இரண்டு இறைவாக்குரைக்கும் படிப்பினையாளர்களின் வார்த்தைகள் மற்றும் அறிக்கைகளை மட்டும் நினைவில் கொள்ளவில்லை, ஆனால், அனைத்துக்கும் மேலாக, அவர்களின் அன்பான நெருக்கத்தையும் நினைவில் கொள்கின்றோம் என்பதும் மிகவும் குறிப்பிடத்தக்கது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
உண்மையில், அவர்களின் இந்த நல்லிணக்கப் பயணம் என்பது, நெருக்கத்தை அதிகரிப்பது மற்றும் தடைகளை முறியடிப்பது ஆகியவற்றின் வழியாக, கிறிஸ்தவ ஒன்றிப்புசார் சகோதரத்துவத்தின் ஒருவருக்கொருவர்மீதான அங்கீகாரத்தை உரையாடலாக வெளிக்காட்டுகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
மேலும், நட்பு உரையாடல், பொதுவான இறைவேண்டல் மற்றும் மனுகுலத்திற்கான பணியில் கூட்டு நடவடிக்கை வழியாக இணைந்தவர்கள், குறிப்பாக வறுமை, வன்முறை மற்றும் சுரண்டல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், வெவ்வேறு திருச்சபைகளின் உறுப்பினர்கள் யாவரும் இறைத்தந்தையின் மீது கொண்டுள்ள அன்பால் இன்னும் ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள் என்றும் உரைத்துள்ளார்.
ஸ்காட்லாந்து, இரஷ்யா, உட்பட பல நாடுகளுக்கும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சபைக்கும், மீன்பிடிக்கும் தொழிலாளிகளுக்கும் பாதுகாவலாரான, திருத்தூதர் புனித அந்திரேயா அவர்களின் திருநாள் நவம்பர் 30-ஆம் நாள் சிறப்பிக்கப்படுகிறது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
