தேடுதல்

"சமூகங்கள் மோதலின் தூண்டுதலுக்கு அடிபணியக் கூடாது" : திருத்தந்தை

இந்தக் காணொளிச் செய்தி யூபிலி ஆண்டின் கருப்பொருள்களுடன் ஒத்துப்போகும் அதேவேளை, இப்புனித ஆண்டின் மகிழ்ச்சியைப் பெறுவதற்கான திருத்தந்தையின் நோக்கங்களுக்காக இறைவேண்டல் செய்யவும் விசுவாசிகளை அழைக்கிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இன, அரசியல், மத அல்லது கருத்தியல் காரணங்களால் ஏற்படும் உள் மோதல்களைத் தவிர்க்க சமூகங்கள் இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று, ஜூலை 29, இச்செவ்வாயன்று வெளியிட்ட ஆகஸ்ட் மாதத்திற்கான தனது இறைவேண்டல் கருத்தில்  கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மோதலுக்குப் பதிலாக உரையாடல், இரக்கம் மற்றும் உடன்பிறந்த உறவை மக்கள் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அச்சம், தப்பெண்ணம் மற்றும் பிரிவினையை வெல்வதற்கு, நமது பகிரப்பட்ட மனிதகுலத்தை அதாவது, அனைவரும் ஒரே கடவுளின் குழந்தைகளாக இருக்கிறோம் என்பதை அங்கீகரிப்பது அவசியம் என்று மேலும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

உண்மையான அமைதி என்பது நமது இதயத்தில் தொடங்குகிறது என்றும், நீதியை மேம்படுத்துவதிலும், பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாப்பதிலும், ஒன்றிப்பை வளர்ப்பதிலும் அனைத்து நாட்டு அரசுகளுக்கும் பங்கு உண்டு என்றும் இக்காணொளிச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

இந்தக் காணொளிச் செய்தி இந்த யூபிலி ஆண்டின் கருப்பொருள்களுடன் ஒத்துப்போகும் அதேவேளை, இப்புனித ஆண்டின் மகிழ்ச்சியைப் பெறுவதற்கான திருத்தந்தையின் நோக்கங்களுக்காக இறைவேண்டல் செய்யவும் விசுவாசிகளை அழைக்கிறது.

இயேசு சபை தகவல் தொடர்பு பணியகத்துடன் (JesCom) இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்தக் காணொளி, உலகளாவிய பிளவு மற்றும் வன்முறையின் வலிமை வாய்ந்த படங்களைக் கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஜூலை 2025, 12:32