மனிதகுலத்திற்கு சேவை செய்யும் சமூகங்களை மேம்படுத்துங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
CISL எனப்படும் இத்தாலியத் தொழிலாளர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் 20-வது தேசிய மாநாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியொன்றில், "மனித மேம்பாட்டுக்கு சேவை செய்யும் அமைதியான சமூகங்களை மேம்படுத்துவதற்கான அழைப்பொன்றை விடுத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஜூலை 16, இப்புதனன்று, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வழியாக வழங்கியுள்ள இச்செய்தியில், மிகவும் மனிதாபிமான சமூக ஒழுங்கைக் கட்டியெழுப்புவதை வலியுறுத்தியுள்ள திருத்தந்தை, பங்கேற்பாளர்கள் தங்கள் சமூகப் பொறுப்புகளில் உறுதியாக இருக்கவும் ஊக்கப்படுத்தியுள்ளார்.
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது உரையில், புனித அகுஸ்தினாரின் வாழ்விலிருந்து, "ஒழுங்கின் அமைதி" என்ற கருத்தியல் குறித்தும் அவர்களுக்கு விளக்கியுள்ளார்.
இம்மாட்டில் பங்கேற்ற இத்தாலிய அரசுத் தலைவர் செர்ஜியோ மத்தெரெல்லா அவர்களும், "பங்கேற்பின் துணிவு" என்ற கருப்பொருளைப் பாராட்டி உரையாற்றினார்.
மேலும் "மக்களாட்சியில் தொழிலாளர் பங்கேற்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய மத்தெரெல்லா அவர்கள், வேலை செய்யும் உரிமை மற்றும் நியாயமான ஊதியம் முன்னேற்றத்திற்கும் மனித மாண்பிற்கும் இன்றியமையாதது என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
