தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ  

உக்ரைன் நாட்டின் அமைதிக்காக கடினமாக செபிப்போம் – திருத்தந்தை

உக்ரைன் போர், நாட்டு மக்களுக்கான அமைதி பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், உக்ரைன் நாட்டில் அமைதி திரும்புவதற்கான நம்பிக்கை இருக்கிறது என்றும், ஆனால் அதற்காக நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும், கடினமாக செபிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உலக மக்களின் அமைதிக்காக உண்மையிலேயே முன்னோக்கிச் செல்வதற்கான வழிகளைத் தேட வேண்டும் என்றும், அமைதியை அடைவதற்கான வழிகளைக் காண வேண்டும்” என்று செய்தியாளார்களிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 19, செவ்வாய் மாலை தனது விடுமுறையை காஸ்தல் கந்தோல்போ இல்லத்தில் கழித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு வத்திக்கான் வருவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் உரையாடியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 13, மாலை தனது இரண்டாம் கட்ட கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக காஸ்தல் கந்தோல்போ சென்ற திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் 19 செவ்வாய் உரோம் உள்ளூர் நேரம் இரவு ஒன்பது மணியளவில் வத்திக்கான் திரும்பினார். ஏறக்குறைய  6 நாள்களைக்கொண்ட இந்த விடுமுறையில் அல்பானோ ஆலயத்ஹ்தில் திருப்பலி, மூவேளை செப உரை, ஏழைகளுடன் உணவு விருந்து என பல நிகழ்வுகளில் பங்கேற்றார்.

உக்ரைன் போர், நாட்டு மக்களுக்கான அமைதி பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், உக்ரைன் நாட்டில் அமைதி திரும்புவதற்கான நம்பிக்கை இருக்கிறது என்றும், ஆனால் அதற்காக நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும், கடினமாக செபிக்க வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், உண்மையாக முன்னோக்கிச் செல்வதற்கான வழிகளைத் தேட வேண்டும், அமைதியைக் காண வேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

திருத்தந்தையாகப் பொறுப்பேற்று 100 நாள்களை நிறைவு செய்த திருத்தந்தை அவர்கள், அதனைக்குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், இந்த முதல் 100 நாள்களைக் கடவுளிடமிருந்து தான் பெற்றுக்கொண்ட ஆசீராகக் கருதுவதாகவும் அது அளவற்ற விதத்தில் மக்கள் வழியாகக் கிடைப்பதாகவும் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 ஆகஸ்ட் 2025, 14:24