தேடுதல்

காஸ்தல் கந்தோல்போ கோடை விடுமுறை இல்லம் காஸ்தல் கந்தோல்போ கோடை விடுமுறை இல்லம்  (@VATICAN MEDIA)

காஸ்தல் கந்தோல்போ இல்லத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ

ஆகஸ்டு 13 ,புதன் கிழமை மாலை முதல் 17, ஞாயிறு வரை கஸ்தல் கந்தல்போ இல்லத்தில் கோடை விடுமுறையைக் கழிக்க இருக்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆகஸ்டு 17, ஞாயிறு மாலை வத்திக்கான் திரும்ப உள்ளார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இன்று மாலை உரோம் உள்ளூர் நேரம் மாலை 4.30 மணியளவில் திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்போ செல்ல இருக்கின்றார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 13, புதன் கிழமை மாலை முதல் 17 ஞாயிறு வரை காஸ்தல் கந்தோல்போ இல்லத்தில் கோடை விடுமுறையைக் கழிக்க இருக்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆகஸ்டு 17, ஞாயிறு மாலை வத்திக்கான் திரும்ப உள்ளார்.

ஆகஸ்டு 15, வெள்ளியன்று காலை 10 மணியளவில் அன்னை மரியின் விண்ணேற்புப் பெருவிழா திருப்பலியினை காஸ்தல் கந்தோல்போவில் உள்ள வில்லாநோவா புனித தோமா பங்கு ஆலயத்தில் நிறைவேற்ற உள்ளார். அதனைத் தொடர்ந்து நண்பகலில் திருப்பீட வளாகத்தில் பொதுமக்களுக்கு மூவேளை செப உரையினையும் வழங்க இருக்கின்றார்.

ஆகஸ்டு 17, ஞாயிறன்று காலை 9.30 மணியளவில் அல்பானோ பகுதியில் உள்ள அன்னை மரியா திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்ற உள்ள திருத்தந்தை அவர்கள், நண்பகலில் லிபர்த்தா வளாகத்தில் பொதுமக்களுக்கு மூவேளை செப உரையினையும் வழங்க இருக்கின்றார். அதன்பின் அல்பானோ காரித்தாஸ் உதவியாளர்கள் மற்றும் ஏழைகளுடன் போர்கோ லவுதாதோ சி என்னுமிடத்தில் நடைபெறும் மதிய உணவில் பங்கேற்று ஏழைகளுடன் உணவருந்த இருக்கின்றார் திருத்தந்தை பதினான்காம் லியோ.    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 ஆகஸ்ட் 2025, 14:47