சிறைக்கைதிகளுடன் திருத்தந்தையைச் சந்தித்தார் முதுபெரும்தந்தை Francesco Moraglia
மெரினா ராஜ் - வத்திக்கான்
வெனிஸ் நகர முதுபெரும் தந்தை Francesco Moraglia மற்றும் வெனிசின் தூய மேரி மேஜர் சிறைச்சாலை கைதிகள் மூவரை வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
ஆகஸ்ட் 7, வியாழனன்று வத்திக்கானின் கொன்சிஸ்தோரோ அறையில் வெனிஸ் நகரத் திருப்பயணிகள் குழுவினரைச் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மக்கள் அனைவரையும் வாழ்த்தினார்.
திருத்தந்தையுடனான தனிப்பட்ட சந்திப்பின் அனுபவம் தன்னை மகிழ்வாலும் பெருமையால் நிரப்புகிறது என்றும், நீதிபதி, சிறைச்சாலை காவல்துறை, கல்வியாளர்கள், அருள்பணி மாசிமோ கதமுரோ மற்றும் வெனிசின் முதுபெரும்தந்தை அவர்களின் அர்ப்பணமுள்ள பணிக்கு நன்றி என்றும் தெரிவித்தார் வெனிஸ் சிறைச்சாலை இயக்குநர் Enrico Farina.
மேலும், ஒரு தீவிரமான, மனிதாபிமான மற்றும் ஆன்மிக பயணத்தை மூன்று சிறைக்கைதிகளும் இத்திருப்பயணத்தில் அனுபவிக்க முடிந்தது என்றும், இந்த மிகவும் சிறப்பு வாய்ந்த தருணத்தில் அவர்களுடன் இருப்பது தனக்கு சிறப்பானதாக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார் என்ரிகோ.
திருத்தந்தை பதினான்காம் லியோவுடனான சந்திப்பு, தங்களது பயணம் மற்றும் திருயாத்திரை அனுபவத்தை உண்மையிலேயே பலனளிக்கிறது என்றும், இது முற்றிலும் நம்பகமான நம்பிக்கையின் அடையாளமாக மேற்கொள்ளப்படுகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார் ஆண்கள் சிறைச்சாலையின் பொறுப்பாளர் அருள்பணி மாசிமோ கதமுரோ.
சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் மட்டுமன்று அனைத்து மக்களின் உண்மையான வாழ்க்கைக்கு அவசியமான பரிமாணத்தை திருத்தந்தையுடனானஇந்நிகழ்வானதுக் குறிக்கிறது என்றும், இந்த திருப்பயணத்தை ஒன்றிணைந்து நிறைவேற்றி இருப்பது, எல்லாவற்றையும் வலுவானதாகவும், உண்மையானதாகவும், மேலும் உறுதியானதாகவும் ஆக்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் அருள்பணி மாசிமோ கதமுரோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
