தேடுதல்

 Albanoவில் உள்ள அன்னை மரியா திருஉருவத்தின் முன் செபிக்கும் திருத்தந்தை Albanoவில் உள்ள அன்னை மரியா திருஉருவத்தின் முன் செபிக்கும் திருத்தந்தை  (ANSA)

அன்னை மரியாவின் துணைகொண்டு எச்சூழலிலும் நாம் வாழ முடியும்

வாழ்வின் முக்கியமான அடையாளமாக, எடுத்துக்காட்டாக அன்னை மரியாவை நாம் கொண்டிருக்கும்போது வாழ்வின் எல்லா சூழல்களையும் நாம் எதிர்கொள்ள முடியும் – திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

வாழ்க்கையின் நிச்ச்யமற்ற தருணங்களை எதிர்கொள்ளவும், அதிலிருந்து மீளவும் அச்சூழலை அன்னை மரியாவின் பாதத்தில் ஒப்படைத்து வாழ வேண்டும் என்றும், அன்னை மரியாவின் துணை கொண்டு எச்சூழலிலும் நம்மால் வாழ முடியும் என்றும் லவுரா என்னும் தாய்க்கு பதில் அளித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

ஆகஸ்டு 18, திங்கள்கிழமை மாலை வெளியான பியாட்சா சன் பியெத்ரோ என்னும் பத்திரிக்கையின் அண்மைய இதழில் வெளியான தாய் லவுரா என்பவரின் கேள்விகளுக்கு பதில் அளித்து இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

திருமணமாகி மூன்று பெண்குழந்தைகளுக்குத் தாயான லவுரா, கணவனின் மிகுதியான அன்பும், கிறிஸ்தவ முறைகளில் நம்பிக்கையுடன் வளரும் பிள்ளைகளின் பாசமும் இருந்தபோதிலும், நம்பிக்கையில் தளர்ச்சி ஏற்படும்போது, வாழ்வில் சிக்கலான கடினமான சூழல்கள் மற்றும் துன்பங்கள் ஏற்படும்போது எவ்வாறு சமாளிப்பது எதிர்கொள்வது என்ற தனது கருத்துக்களைக் கடிதமாக எழுதி திருத்தந்தையின் ஆலோசனையை நாடி பத்திரிக்கை வழியாக வெளியிட்டார்.

அவரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில், “கிறிஸ்தவ நம்பிக்கை மீதான லவுராவின் ஆர்வமும் இதயத்தின் உண்மையும், லவுராவிற்கும் அவரது  குடும்பத்திற்கும் ஆசீர் போன்றது என்று வாழ்த்தியுள்ள திருத்தந்தை அவர்கள், வாழ்வின் முக்கியமான அடையாளமாக, எடுத்துக்காட்டாக அன்னை மரியாவை நாம் கொண்டிருக்கும்போது வாழ்வின் எல்லா சூழல்களையும் நாம் எதிர்கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிறிஸ்தவ அன்பின் செயல்பாடுகளை ஒருவர் மற்றவருடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும், இதுவே நமது ஆன்மிக முன்னேற்றத்திற்கும், கடவுளின் அருள் மற்றும் விருப்பத்திற்கு ஒத்துழைப்பதற்கான அடிப்படை என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

அன்னை மரியின் துணையுடன், வாழ்வின் ஒவ்வொரு நிச்சயமற்ற தன்மையையும் எதிர்கொள்ள முடியும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், கிறிஸ்தவ அன்பின் செயல்களை ஒருவர் மற்றவருடன் பகிர்ந்து மகிழ்வுடன் வாழ வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 ஆகஸ்ட் 2025, 10:32