தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ   (ANSA)

திருத்தூதர்களாக, நம்பிக்கையின் பணியாளர்களாக அனுப்பப்பட...

இயேசு அதிகாரத்தின் வழியாக நமக்குத் தன்னை வெளிப்படுத்தவில்லை, மாறாக தன்னுடன் ஒன்றித்திருக்க நம்மை அழைக்கும் ஒரு தந்தையின் அன்பில் அவரை வெளிப்படுத்தினார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கொடையானது தங்களுக்காக மட்டுமல்ல. மாறாக, நற்செய்தியின் நோக்கத்திற்காகப் பணிசெய்வதற்காக என்றும், கடவுளுடைய திருத்தூதர்களாகவும் நம்பிக்கையின் ஊழியர்களாகவும் அனுப்பப்பட ஆயர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 11, வியாழனன்று வத்திக்கானில், இவ்வாண்டு திருஅவையில் புதிதாதக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆயர்களை சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.  

ஆயர் என்பவர் ஒரு பணியாளர், மக்களின் நம்பிக்கைக்கு பணியாற்ற அழைக்கப்படுபவர் என்றும், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். ( 2 கொரி 8:9) என்ற இறைவார்த்தைக்கேற்ப வாழ வலியுறுத்தினார் திருத்தந்தை.  

நமது அடையாளத்துடன் தொடர்புடையது நமது பணி என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், சேவை என்பது ஒரு வெளிப்புற பண்போ அல்லது ஒருவரின் பங்கைப் பயன்படுத்துவதற்கான ஒரு வழியோ அல்ல என்றும் எடுத்துரைத்தார்.

நற்செய்தியின் சீடர்களாகவும் அறிவிப்பாளர்களாகவும் இருக்க இயேசு அழைக்கும் பன்னிரண்டு திருத்தூதர்கள் போல, நம்மை வளப்படுத்த தன்னை ஏழையாக்கிய இயேசுவின் தேர்வை வெளிப்படுத்த, உள்மன சுதந்திரம், ஆவியின் ஏழ்மை மற்றும் அன்பிலிருந்து வரும் பணியை ஆற்ற விருப்பம் ஆகியவற்றை ஆயர்கள் கொண்டிருக்க வேண்டும் என்றும், இத்தகைய பண்புகள் கொண்டு வாழ வேண்டும் என்று வலியுறுத்திய இயேசு தனது வாழ்வால் அதனை நமக்கு வெளிப்படுத்தினார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இயேசு அதிகாரத்தின் வழியாக நமக்குத் தன்னை வெளிப்படுத்தவில்லை, மாறாக தன்னுடன் ஒன்றித்திருக்க நம்மை அழைக்கும் ஒரு தந்தையின் அன்பில் அவரை வெளிப்படுத்தினார் என்றும் கூறினார் திருத்தந்தை.

நம்பிக்கையின் ஊழியர்களாக இருப்பது முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் இருந்தாலும், நமது பணியானது சேவை மனப்பான்மையில், கிறிஸ்துவின் சாயலில் வேரூன்றியுள்ளது என்பதை அறிந்திருப்பது மட்டும் போதாது என்றும், திருத்தூதர்களின் பாணியில், பல்வேறு வகையான மேய்ப்புப்பணிப் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தில், நீங்கள் எதிர்கொள்ளும் உறுதியான சூழ்நிலைகளைப் போலவே பன்முகத்தன்மை கொண்ட மற்றும் ஆக்கப்பூர்வமான வழிகளில் நற்செய்தியை அறிவிக்கும் ஏக்கம் கொண்டவர்களாகவும் வாழ வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 செப்டம்பர் 2025, 15:32