தேடுதல்

வத்திக்கான் வளாகத்தில் மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலி திருப்பலி

உலகம் முழுவதிலுமிருந்து ஏறக்குறைய 115 நாடுகளிலிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மறைக்கல்வியாளர்கள் இத்திருப்பலியில் பங்கேற்றனர்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

செப்டம்பர் 28, ஞாயிறு காலை 10 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தலைமையில் மறைக்கல்வியாளர்களுக்கான யூபிலி நாள் சிறப்புத் திருப்பலியானது நடைபெற்றது.

இத்திருப்பலியின்போது இத்தாலி, இஸ்பெயின், இங்கிலாந்து, போர்த்துக்கல், பிரேசில், மெக்சிகோ, இந்தியா, தென்கொரியா, கிழக்குத்திமோர், ஐக்கிய அரபு நாடுகள், பிலிப்பீன்ஸ், அமெரிக்க ஐக்கிய நாடுகள், மொசாம்பிக், பெரு, தொமினிக்கன் குடியரசு நாடுகள் ஆகியவற்றை சார்ந்த 39 பேர் புதிய மறைக்கல்வியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

மறைக்கல்வியாளர்களாக பொறுப்பேற்றதன் அடையாளமாக திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களிடமிருந்து திருச்சிலுவையினை அடையாளச் சின்னமாகப் பெற்றனர்.

உலகம் முழுவதிலுமிருந்து ஏறக்குறைய 115 நாடுகளிலிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மறைக்கல்வியாளர்கள் இத்திருப்பலியில் பங்கேற்றனர்.

இத்திருப்பலியின் நற்கருணை வழிபாட்டினைத் திருத்தந்தை அவர்களுடன் இணைந்து புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ பிசிகெல்லா மற்றும் அத்திருப்பீடத்துறையின் மறைக்கல்விக்குப் பொறுப்பான ஆயர் Franz-Peter Tebartz-van Elst, ஆகியோர் சிறப்பித்தனர்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 செப்டம்பர் 2025, 14:45