திருவனந்தபுரம் சீரோ மலங்கரா தலத்திருஅவையின் துணை ஆயர் ஜான் குட்டியில்
மெரினா ராஜ் – வத்திக்கான்
இந்தியாவின் சிரோ-மலங்கரா தலத்திருஅவையைச் சார்ந்த திருவனந்தபுரம் மறைம்மாவட்டத்திற்கு துணை ஆயராக ஜான் குட்டியில் அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 19, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி திருவனந்தபுரம் சிரோ மலங்கரா தலத்திருஅவையைச் சார்ந்த அருள்பணியாளர் ஜான் குட்டியில் அவர்களை துணை ஆயராக உயர்த்தியதுடன் இத்தாலியின் கனதா பகுதி பட்டம் சார் ஆயராகவும் நியமித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கிழக்குத்தெருவில் 1982 ஆம் ஆண்டு மே 30 அன்று பிறந்த ஆயர் ஜான் குட்டியில் அவர்கள், அலோசியஸ் இளம்குருமடம் மற்றும் புனித மரியா மலங்கரா குருமடம் ஆகியவற்றில் கல்வி பயின்றார். அதன்பின் உரோமில் உள்ள கிழக்கத்திய திருப்பீட நிறுவனத்தில் பயின்று முனைவர் பட்டம் பெற்றார்.
2008-ஆம் ஆண்டு ஏப்ரல் 2, அன்று அருள்பணியாளராக குருத்துவ அருள்பொழிவுபெற்றார். திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குத்தளங்களில் பங்குத்தந்தை, பேராயரின் தனிப்பட்ட செயலாளர், உயர் மறைமாவட்டத்தின் இளம்குருமட அதிபர், அமைதியின் அரசியாம் தூய அன்னை மரியா பேராலயத்தின் அதிபர், புனித மரியா மலங்கரா குருத்துவக் கல்லூரியின் பேராசிரியர், சினோடல் ஆணையத்தின் இறை அழைத்தலுக்கான செயலாளர் என பல பதவிகளை வகித்தவர்.
தற்போது, நலஞ்சிராவில் உள்ள புனித இரண்டாம் ஜான் பால் சிரோ-மலங்கரா தலத்திருஅவை அருள்பணியாளராகவும் திருவனந்தபுரம் உயர் மறைமாவட்டத்தின் வேந்தராகவும் பணியாற்றி வருகின்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
