தேடுதல்

மூவேளே செப உரையின்போது, காசாவில் அமைதியை வலியுறுத்திய மக்கள் மூவேளே செப உரையின்போது, காசாவில் அமைதியை வலியுறுத்திய மக்கள்   (@VATICAN MEDIA)

வன்முறையின் அடிப்படையில் எதிர்காலம் இல்லை

வேதனைக்குள்ளான நிலத்தில் துன்பப்படும் நமது சகோதர சகோதரிகளுக்கு உடனிருப்பை வெளிப்படுத்தும் அவர்களின் முன்முயற்சியையும், திருஅவை முழுவதும் செய்துவரும் பல முயற்சிகளையும் பாராட்டினார் - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

வன்முறை, கட்டாய நாடுகடத்தல் அல்லது பழிவாங்கல் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்காலம் இல்லை என்றும், மக்களுக்கு அமைதி தேவை; அவர்கள் உண்மையிலேயே அமைதிக்காக உழைக்கிறார்கள், அமைதியை அன்பு செய்கின்றார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 21, ஞாயிறு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் வழங்கிய செப விண்ணப்பங்களின்போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

காசா பகுதி மக்களுடன் ஒற்றுமைப் பணிகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு கத்தோலிக்க சங்கங்களின் பிரதிநிதிகளை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், வேதனைக்குள்ளான நிலத்தில் துன்பப்படும் நமது சகோதர சகோதரிகளுக்கு உடனிருப்பை வெளிப்படுத்தும் அவர்களின் முன்முயற்சியையும், திருஅவை முழுவதும் செய்துவரும் பல முயற்சிகளையும் பாராட்டினார்.

மிந்தேலோ, கேப் வெர்டே, கோமோ மறைமாவட்டத்தைச் சேர்ந்த திருப்பயணிகள், அங்கோலா, போலந்து, ப்ளிசின், ஸ்பெயினில் சியுடாட் ரியல், போர்ச்சுகலில் போர்டோ மற்றும் தான்சானியாவில் முவான்சா ஆகிய நாடுகளிலிருந்து வந்த குழுக்களையும் வாழ்த்தினார்.

உரோமில் தங்களது கல்விப் படிப்பைத் தொடங்கும் இயேசு சபையின் அருள்பணியாளர்கள், புனித வின்சென்ட் தே பால் சங்கத்தார், சோரா, பெஸ்காரா, மசெராட்டா, மாரிக்னானோவில் உள்ள புனித ஜொவான்னி, வெனிஸ், பஸ்சானோ தெல் கிராப்பா, புனித கேத்தரி, வில்லார்மோசா, டரான்டோ, சோமா வெசுவியானா, பொன்சானோ ரோமானோ மற்றும் பதுவா மறைமாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு குழுக்களைச் சேர்ந்த திருப்பயணைகளையும் வாழ்த்தினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 செப்டம்பர் 2025, 13:48