தேடுதல்

வங்காளதேசத்தில் நடைபெற்ற பல்சமய உரையாடல் கூட்டத்தின்போது வங்காளதேசத்தில் நடைபெற்ற பல்சமய உரையாடல் கூட்டத்தின்போது 

கலாச்சாரம் என்பது வளமான பாரம்பரியம்

நாம் அனைவரும் கடவுளுடையக் குழந்தைகள், சகோதர சகோதரிகள் எனவே ஒரு குடும்பமாக, நல்லிணக்கம் மற்றும் அமைதியின் கலாச்சாரத்தை தொடர்ந்து வளர்ப்பதற்கான வாய்ப்பையும் பொறுப்பையும் பகிர்ந்து கொள்கிறோம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கலாச்சாரம் என்பது ஒவ்வொரு மக்களையும் வகைப்படுத்தும் கலைகள், கருத்துக்கள் மற்றும் சமூக நிறுவனங்களின் வளமான பாரம்பரியம் என்றும், அதே நேரத்தில், கலாச்சாரம் என்பது வளர்ச்சியைத் தக்கவைக்கும் ஒரு வளர்ப்பு சூழலாகப் புரிந்து கொள்ள முடியும் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 6 முதல் 12 வரை வங்காளதேசத்தின் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பல்சமய உரையாடல் கூட்டத்தின் பங்கேற்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அனுப்பிய செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

“சகோதர சகோதரிகளுக்கு இடையே நல்லிணக்க கலாச்சாரத்தை ஊக்குவித்தல்" என்ற கருப்பொருளில் சிறப்பிக்கப்படும் இக்கூட்டத்தின் பங்கேற்பதன் வழியாக, நாம் அனைவரும் கடவுளுடையக் குழந்தைகள், சகோதர சகோதரிகள் எனவே ஒரு குடும்பமாக, நல்லிணக்கம் மற்றும் அமைதியின் கலாச்சாரத்தை தொடர்ந்து வளர்ப்பதற்கான வாய்ப்பையும் பொறுப்பையும் பகிர்ந்து கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

ஓர் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்பு பல்வேறு தாவரங்கள் அருகருகே செழிக்க அனுமதிப்பது போல,ஓர் ஆரோக்கியமான சமூக கலாச்சாரமும் பல்வேறு சமூகங்கள் நல்லிணக்கத்தில் செழிக்க அனுமதிக்கிறது என்றும், அத்தகைய கலாச்சாரத்தை நாம் கவனமாக வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.

நல்லிணக்கத்தின் கலாச்சாரம் புறக்கணிக்கப்படும்போது, ​​களைகள் அமைதியை நெரித்துவிடும் என்பதை வரலாற்றின் வேதனையான தருணங்களிலிருந்து நாம் அறிகின்றோம் என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், அச்சூழலில் சந்தேகங்கள் வேரூன்றும், ஒரே மாதிரியான கருத்துக்கள் கடினமடையும், வன்முறையாளர்கள் பிரிவினையை நம்மில் விதைக்க நமது அச்சங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மதங்களுக்கு இடையேயான உரையாடலில் நண்பர்களாக, உடன்பிறந்த உணர்விற்கானக் களத்தை வளர்க்கும் தோட்டக்காரர்களைப் போல நாம் இருக்க வேண்டும் என்றும், உரையாடலை நம்மில் வளமாக வைத்திருக்கவும், தப்பெண்ணத்தின் களைகளை அகற்றவும் பல்சமய உரையாடல் வழியாக நாம் உதவ வேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 செப்டம்பர் 2025, 16:34