தேடுதல்

கார்மேல் சபை அருள்சகோதரிகள் கார்மேல் சபை அருள்சகோதரிகள்  

கிறிஸ்து வழங்கிய பாதையைப் பின்பற்றும் கார்மேல் சபையினர்

பாரீஸ் உயர்மறைமாவட்ட பேராயர் லாரன்ட் உல்ரிச் அவர்களுக்கு அனுப்பபட்டுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வாழ்த்து தந்திச்செய்தியானது திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களின் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இறையியல் நம்பிக்கையால் இயக்கப்படும் கார்மேல் சபையினர், தங்கள் வாழ்க்கையின் மறைபொருளாம் பலனை நிச்சயமாகக் கொண்டுள்ளனர் என்றும், கிறிஸ்துவால் வழங்கப்பட்ட பாதையைப் பின்பற்றுவதன் வழியாக அன்புப் பணியினைப் பிறருக்கு வழங்குகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 13, சனிக்கிழமை பாரீசில் உள்ள நோத்ரே டேம் அன்னை மரியா ஆலயத்தில் கார்மேல் சபையைச் சார்ந்த 16 அருள்சகோதரிகள் புனிதர்களாக உயர்த்தப்பட இருப்பதற்கு நன்றி தெரிவித்து நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் பங்கேற்கும் மக்களுக்கு அனுப்பியுள்ள தந்திச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பாரீஸ் உயர்மறைமாவட்ட பேராயர் லாரன்ட் உல்ரிச் அவர்களுக்கு அனுப்பபட்டுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் வாழ்த்து தந்திச்செய்தியானது திருப்பீடச்செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களின் கையொப்பமிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

மறைசாட்சிகளாக இறந்த காம்பைன் பகுதி கார்மேல் சபை அருள்சகோதரிகள் 16 பேருக்கு புனிதர் பட்டம் வழங்க திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2024ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று அனுமதி அளித்தத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்வோடு இந்நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

மறைசாட்சிகளாகத் தங்களது வாழ்வை அர்ப்பணித்த அருள்சகோதரிகள் இறந்து 200 ஆண்டுகளைக் கடந்த நிலையில் அவர்களது வாழ்வானது இறைத்தன்மைக்கு வழிவகுத்துள்ளது என்றும், திருஅவையின் வழிபாட்டு முறை பாடல்கள் மற்றும் திருப்பாடல்களுடன் கடவுளைப் புகழ்ந்து தன்னுயிரைத் தியாகம் செய்த புனித தெரசா போல அருள்சகோதரிகள் தங்களது வாழ்வைக் கையளித்தார்கள் என்றும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

அருள்சகோதரிகளிடம் குடிகொண்டிருந்த மன அமைதி, உண்மையிலேயே மகத்தான தொண்டு என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், ஆனால் அவர்களை உயிர்ப்பித்தது இறையியல் நம்பிக்கை மற்றும் நம்பிக்கையின் பலன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 செப்டம்பர் 2025, 15:59