இறைத்தந்தையை நோக்கி கூக்குரல் எழுப்புவோம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
நம்மை மெதுவாக விழுங்கக்கூடிய தருணங்களை நாம் நமது வாழ்வில் எதிர்கொள்கிறோம் என்றும், இறைத்தந்தையை நோக்கி கூக்குரல் எழுப்ப அஞ்ச வேண்டாம் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 10, புதனன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு வழங்கிய மறைக்கல்வி உரைக்கருத்தின் ஒரு பகுதியை தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
நமது கூக்குரல் நேர்மையாகவும், பணிவாகவும், இறைத்தந்தையை நோக்கியும் இருக்கும் வரை, கடவுளை நோக்கி அழைக்க நாம் அஞ்ச வேண்டாம் என்று இயேசு தனது வாழ்க்கையின் வழியாக நமக்குக் கற்பிக்கிறார் என்றும், நமது கூக்குரல் அன்பிலிருந்து பிறந்தால், அது அர்த்தமற்றதாக ஒருபோதும் இருக்காது என்றும் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை.
நமது கூக்குரல் கடவுளிடம் ஒப்படைக்கப்பட்டால், அது ஒருபோதும் புறக்கணிக்கப்படாது என்றும், அது மற்றொரு உலகம் சாத்தியம் என்று தொடர்ந்து நம்புவதற்கான ஒரு வழி என்றும் தனது குறுஞ்செய்தியில் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
