தேடுதல்

செய்தியாளர்கள் மத்தியில் திருத்தந்தை செய்தியாளர்கள் மத்தியில் திருத்தந்தை  

அனைத்து மக்களையும் மதிக்கும் ஒரு வழியைக் கண்டுபிடிப்போம்

ஆயுதங்களைக் கீழே போட வேண்டியது அவசியம், இராணுவ முன்னேற்றங்களை நிறுத்துவதற்காக, உரையாடல் மேசையில் ஒன்று சேர வேண்டும் - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருஅவையானது இரு அரசுகளுக்கு இடையிலான தீர்வுகளை பல ஆண்டுகளாக அங்கீகரித்து வருகின்றது என்றும், அனைத்து மக்களையும் மதிக்கும் ஒரு செயலை, வழியை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செப்டம்பர் 23, செவ்வாய் இரவு காஸ்தக் கந்தோல்போவில் இருந்து வத்திக்கான் திரும்பும் முன் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், ஆயுதங்களைக் கீழே போட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

பாலஸ்தீன அரசின் அங்கீகாரம் "உதவக்கூடும், ஆனால் இந்நேரத்தில் உண்மையில் செவிசாய்ப்பதற்கு இஸ்ரயேல் அரசு விருப்பம் இல்லாதிருப்பதால் உரையாடலுக்கான வாய்ப்பு தற்சமயத்தில் முறிந்துவிட்டது" என்று கூறிய திருத்தந்தை அவர்கள், "அனைத்து மக்களையும் மதிக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.

செப்டம்பர் 23, செவ்வாய் பிற்பகல் காசாவில் உள்ள மக்களின் நிலை அறிய திருக்குடும்ப தலத்திருஅவையினரைத் தொடர்பு கொண்டதாகத் தெரிவித்த திருத்தந்தை அவர்கள், கடவுளுக்கு நன்றி, காசா தலத்திருஅவையில் உள்ள அனைவரும் நலமாக உள்ளனர் எனினும் தாக்குதல்கள் அதிகமாக உள்ளன என்றும் எடுத்துரைத்தார்.

ஐரோப்பா மற்றும் ரஷ்யாவின் ஊடுருவல்களைப் பொறுத்தவரை, "யாரோ ஒருவர் மோதலைத் தேடுகிறார்கள், அது பெருகிய முறையில் ஆபத்தானதாகி வருகிறது" என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஆயுதங்களைக் கீழே போட வேண்டிய அவசியம்", "இராணுவ முன்னேற்றங்களை நிறுத்துவதற்காக, உரையாடல் மேசையில் ஒன்று சேர" வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

திருஅவை தொடர்ந்து அரசுத் தூதர்களுடன் உரையாடி வருவதாகவும், நாட்டுத் தலைவர்களுடனும் பேச முயற்சித்து வருவதாகவும் கூறிய திருத்தந்தை அவர்கள், அவர்களுடனான பேச்சுவார்த்தையின்போது வன்முறைச் சூழலுக்கான ஒரு தீர்வைக் கண்டறிவதாகவும் அவர்களில் சிலருடன், பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 செப்டம்பர் 2025, 16:13