தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ. திருத்தந்தை பதினான்காம் லியோ.  (@VATICAN MEDIA)

இரக்கம், உண்மை என்னும் இரண்டு பாதைகளில் பயணிப்போம்

நற்செய்தியில் இடம்பெறும் மார்த்தாவைப் போல இரக்கச் செயல்கள் பல செய்வோம் என்றும் அல்லது மரியாவைப் போல இயேசுவின் பாதத்தில் அமர்ந்து உண்மையைப் பற்றி சிந்திக்கும் பணியினை மேற்கொள்ளலாம்

மெரினா ராஜ் - வத்திக்கான்

நாம் மிகவும் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்ட துறவற வாழ்க்கையில் இறைவனைச் சந்திக்க, திருப்பயணிகளாக நாம் ஒரு பாதையில்  இணைந்து நடக்க வேண்டும் வேண்டும் என்றும், பல பாதைகள் இருப்பது உண்மைதான், ஆனால் அவை அனைத்தும் இரண்டாகக் இரக்கம் மற்றும் உண்மை என்னும் இரண்டு பாதைகளாக நிறைவடைகின்றன என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 15, புதனன்று காலை மறைக்கல்வி உரைக்கு முன்பாக வத்திக்கான் தூய ஆறாம் பவுல் அரங்கத்தில் உள்ள ஓர் அறையில் புனித அகுஸ்தீன் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றும் மெக்சிகன் கூட்டமைப்பின் அருள்சகோதரிகள் ஏறக்குறைய 40 பேரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நற்செய்தியில் இடம்பெறும் மார்த்தா மரியாவை சுட்டிக்காட்டி தனது கருத்துக்களை விளக்கிய திருத்தந்தை அவர்கள், மார்த்தாவைப் போல இரக்கச் செயல்கள் பல செய்வோம் என்றும் அல்லது மரியாவைப் போல இயேசுவின் பாதத்தில் அமர்ந்து உண்மையைப் பற்றி சிந்திக்கும் பணியினை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

வலேன்சியாவின் ஆயரும் திருத்தூதர் பவுலும் நமக்குக் காட்டும் பாதை அன்பின் பாதை என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அன்பை விட எளிதான, இனிமையான ஏதாவது இருக்கிறதா? அன்பின் பாதை மிகவும் எளிதானது, அது கடவுள் மீதான அன்பாக இருந்தாலும் சரி அல்லது அண்டை வீட்டாரின் அன்பாக இருந்தாலும் சரி. அந்த பாதை எளிதானது! எவ்வளவு அழகாகவும் இனிமையாகவும் இருக்கிறது!“ அதனால்தான் "இந்த பாதையின் வழியாகவே பலர் தங்களது இலக்கை அடைந்துள்ளனர் என்றும் கூறினார்.

அன்பு என்பது முயற்சியால் அடையக்கூடிய ஒன்றல்ல, மாறாக ஒரு கொடையாகப் பெறப்படுகிறது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், புனித தாமஸ் அவர்களின் வரிகளான, “கடவுள் உங்களுக்கு எத்தனை விடயங்களைக் கொடுத்தாலும், அவர் தனது அன்பை உங்களுக்குக் கொடுக்கவில்லை என்றால், அவர் உங்களுக்குத் தன்னை கொடுக்க மறுத்துவிட்டார்” என்று பொருள் எனவும் கூறினார்.

நமது பயணம் இதயத்திலிருந்து உருவாகிறது, “உண்மையில், கடவுள் நீங்கள் என்ன செய்கிறீர்கள் அல்லது எவ்வளவு செய்கிறீர்கள் என்பதைப் பார்ப்பதில்லை, மாறாக அவர் மீதான உங்கள் விருப்பத்திலும் அன்பிலும் நீங்கள் எவ்வளவு முன்னேறுகிறீர்கள் என்பதைப் பார்க்கிறார் என்றும், ஏனென்றால், ஒவ்வொரு நபரும் தங்கள் செயல்களால் தீர்மானிக்கப்படுவார்கள் என்பது உண்மைதான் என்றாலும், வேலையின் எடை இதயத்தின் தொண்டு என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

அன்பின் நெருப்பு இல்லாவிட்டால், படைப்புகள் அவற்றின் அர்த்தத்தை இழந்து “ஆன்மாவின் மீது ஒரு சுமையாக” மாறும் என்றும், “அன்பு இருக்கும் இடத்தில் துக்கம் இல்லை” என்றும் கூறினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 அக்டோபர் 2025, 11:35