தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ. திருத்தந்தை பதினான்காம் லியோ.  (@Vatican Media)

இயேசுவின் சீடர்களாக மாற அழைக்கும் அன்னை மரியாவின் ஆன்மிகம்

நம் நம்பிக்கையை வளர்க்கும் மரியன்னை ஆன்மிகம், இயேசுவை அதன் மையமாகக் கொண்டுள்ளது

மெரினா ராஜ் - வத்திக்கான்

மரியாவின் ஆன்மிகம் நற்செய்தியின் பணியில் உள்ளது, அது அதன் எளிமையை வெளிப்படுத்துகிறது என்றும், நாசரேத் ஊர் மரியாவின் மீதான நமது அன்பு, இயேசுவின் சீடர்களாக மாறுவதில் அவருடன் சேர நம்மை வழிநடத்துகிறது என்றும் ஒவ்வொரு கிறிஸ்தவ ஆன்மிகமும் இந்த நெருப்பிலிருந்து பாய்ந்து அதை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

அக்டோபர் 12, ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற மரியன்னை ஆன்மிகத்தாருக்கான யூபிலியில் பங்கேற்பாளர்களுக்கான யூபிலி சிறப்புத்திருப்பலிக்குத் தலைமையேற்று மறையுரையாற்றியபோது இவ்வாறு எடுத்துரைத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நம் நம்பிக்கையை வளர்க்கும் மரியன்னை ஆன்மிகம், இயேசுவை அதன் மையமாகக் கொண்டுள்ளது என்றும், இது ஞாயிற்றுக்கிழமை போன்று ஒவ்வொரு புதிய வாரத்தையும் இறந்தோரிலிருந்து உயிர்த்தெழுதலின் பிரகாசத்தில் திறக்கிறது என்றும் கூறினார் திருத்தந்தை.  

ஞாயிற்றுக்கிழமை திருப்பலிக் கொண்டாட்டமானது நம்மை கிறிஸ்தவர்களாக மாற்ற வேண்டும், அது நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் இயேசுவின் எரியும் நினைவால் நிரப்ப வேண்டும் என்றும், நாம் ஒன்றாக வாழும் முறையையும் பூமியில் வாழும் முறையையும் மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.(எபி 4:12) என்ற விவிலிய வரிகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை அவர்கள், சிரியரான நாமானின் கதையை திருஅவையின் வாழ்க்கைக்கு பொருத்தமான மற்றும் ஊடுருவக்கூடிய செய்தியாக திருத்தந்தை பிரான்சிஸ் கண்டறிந்தார் என்றும் தெரிவித்தார்.

உயிர்த்த இயேசுவிடம் நாம் திரும்பவும், உயிர்த்தெழுந்தவர் இன்னும் நம்மிடம் வந்து நம்மை அழைக்கும் நம் வாழ்க்கையின் நிகழ்வுகளை தியானித்து சிந்திக்கவும் நமக்குக் கற்பிக்கிறது என்றும், விண்ணக வரலாற்றில் நம்மை மூழ்கடித்து பெருமையுள்ளவர்கள் உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடிப்பதையும், வலியோர் அரியணையினின்று தூக்கி எறியப்படுவதையும், தாழ்நிலையில் இருப்போர் உயர்த்தப்படுவதையும், பசித்தோர் நலன்களால் நிரப்பப்படுவதையும், செல்வர் வெறுங்கையராய் அனுப்பப்படுவதையும் காண நமக்கு உதவுகிறது என்றும் கூறினார்.

அன்னை மரியாவின் "ஆம்" என்று வார்த்தையானது, இயேசு நம்மை அவருடைய அரசின் ஒரு பகுதியாக இருக்க அழைக்கிறார், அது ஒரு முறை கொடுக்கப்படும் அழைப்பானது, ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்பட்டது என்பதை எடுத்துரைக்க்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.

மரியாவின் பாதை இயேசுவின் பாதையைப் பின்பற்றுகிறது, இது ஒவ்வொரு மனிதனையும், குறிப்பாக ஏழைகள், காயமடைந்தவர்கள் மற்றும் பாவிகளை சந்திக்க வழிவகுக்கிறது என்றும், இதன் காரணமாக, உண்மையான மரியன்னை ஆன்மீகம் கடவுளின் மென்மையை, "தாயாக இருப்பதற்கான" அவரது வழியை திருச்சபையில் வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறது என்றும் கூறினார் திருத்தந்தை.

 நீதியையும் அமைதியையும் தேடும் உலகில், பூமியின் முகத்தை என்றென்றும் மாற்றிய கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட நிகழ்வுகள் மற்றும் இடங்களுக்கு கிறிஸ்தவ ஆன்மீகத்தையும் மக்கள் பக்தியையும் புதுப்பிப்போம் என்றும், புதுப்பித்தல் மற்றும் மாற்றத்திற்கான ஒரு உந்து சக்தியாக அவற்றைப் பயன்படுத்துவோம் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 அக்டோபர் 2025, 10:42