தேடுதல்

வத்திக்கான் வளாகம் வத்திக்கான் வளாகம் 

திருஅவையில் மேலும் 7 புனிதர்களுக்கான புனிதர் பட்ட திருப்பலி

உரோம் உள்ளூர் நேரம் காலை 10.30 மணியளவில் வத்திக்கான் வளாகத்தில் நடைபெறும் இத்திருப்பலியில் உலகெங்கிலும் இருந்து பல ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்க இருக்கின்றனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

அக்டோபர் 19, ஞாயிறன்று வத்திக்கானில் ஏழு அருளாளர்கள் புனிதர் பட்டம் பெற இருக்கின்றனர்.

துருக்கியாவைச் சார்ந்த பேராயர் இஞ்ஞாசியோ மலோயன், பாப்புவா நியு கினியைச் சார்ந்த பீட்டர் தோ ரோத்,  இறைஇரக்கத்தின் அருள்சகோதரிகள் சபை நிறுவனரான அருள்சகோதரி வின்சென்ஷா மரியா பொலோனி, திருநற்கருணை இயேசுவின் பணியாளர்கள் சபையைச் சார்ந்த அருள்சகோதரி மரியா கார்மன் ரெண்டிலஸ் மார்தினெஸ், கிறிஸ்தவர்களின் பாதுகாவலியான அன்னை மரியா சபையை சார்ந்த அருள்சகோதரி மரிய துரொன்காத்தி, வெனிசுலாவைச் சார்ந்த ஏழையரின் மருத்துவர் என அழைக்கப்படும் ஜோஸ் கிரகோரியோ ஹெர்னன்ஸ் சிஸ்னேரோஸ், பொம்பே புனித செபமாலை அன்னை தொமேனிக்கன் அருள்சகோதரிகள் சபையை நிறுவியவரான பர்த்தலோ லோங்கோ, ஆகியோர் புனிதர் பட்டம் பெற இருக்கின்றனர்.

உரோம் உள்ளூர் நேரம் காலை 10.30 மணியளவில் வத்திக்கான் வளாகத்தில் நடைபெறும் இத்திருப்பலியில் உலகெங்கிலும் இருந்து பல ஆயிரக் கணக்கான மக்கள் பங்கேற்க இருக்கின்றனர்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 அக்டோபர் 2025, 13:11