கேட்டல், பங்கேற்றலில் ஈடுபடுவதே உண்மையான கூட்டொருங்கியக்கம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஒன்றாகப் பயணம் செய்வது திருஅவையின் வாழ்க்கை மற்றும் பணி என்றும், உண்மையான கூட்டொருங்கியக்கத்திற்கு திருமுழுக்கு பெற்ற அனைவருக்கும் கேட்பதும் பங்கேற்பதும் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
கமால்டோலியில் "கூட்டொருங்கியக்கத் தலத்திருஅவையில் ஆயர்" என்ற தலைப்பில் நடைபெறும் ஒரு மாநாட்டின் நிகழ்விற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
திருத்தந்தை அவர்களின் வாழ்த்துச்செய்தியானது திருப்பீட செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களின் கையொப்பமிடப்பட்டு பெனடிக்ட் சபையின் வழிவந்த கமால்தோலிஸ் சபையின் முன்னாள் தலைவர் பெருமதிப்பிற்குரிய அருள்தந்தை தோம் மேத்தியோ ஃபெராரி (OSB) அவர்களுக்கு, அனுப்பப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்கும் கருத்துரையாளர்கள், பங்கேற்பாளர்கள் உதவியாளர்கள் அனைவருக்கும் தனது அரவணைப்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், மாநாட்டின் இறையியல், அழைத்தல், கூட்டொருங்கியக்கக் கொள்கை, ஆயர்கள் அவர்தம் செயல்கள், ஆகியவற்றுக்கும் தனது பாராட்டுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
