தேடுதல்

புலம்பெயர்ந்த சூடான் மக்கள் புலம்பெயர்ந்த சூடான் மக்கள்  

உடன்பிறந்த உறவைக் கட்டியெழுப்ப வேண்டிய கடமையை உணர்வோம்!

இந்த எதிர்கால எதார்த்தத்தை நாம் எதிர்பார்க்கும்போது, அநீதி மற்றும் போரினால் மனித குடும்பம் அனுபவிக்கும் துயரங்களுடன் இது எவ்வாறு வேறுபடுகிறது என்பதை இன்னும் ஆழமாகவும் வேதனையாகவும் உணர்கிறோம்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சகோதரிகளே, சகோதரர்களே, இன்று நாம் ஆழமாக சுவாசிக்கும் புனிதர்களின் ஒன்றிப்பின் மறையுண்மை, மனிதகுலத்தின் இறுதித் தீர்ப்பை நமக்கு நினைவூட்டுகிறது என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ

நவம்பர் 1, சனிக்கிழமையன்று, திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட அனைத்துப் புனிதர்கள் பெருவிழாவன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் வழங்கிய சிறப்பு மூவேளை செபவுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, கடவுளின் அன்பில் நாம் ஒன்றாக மகிழ்வடைடைகிறோம், அனைவரிடமும் பிரசன்னமாகி இருக்கிறோம், கிறிஸ்துவின் முகத்தை ஒத்திருக்கும் மற்றும் வேறுபட்ட முகங்களின் பன்முக அழகை அங்கீகரித்துப் போற்றுகிறோம் என்றும் தெரிவித்தார்.

இந்த எதிர்கால எதார்த்தத்தை நாம் எதிர்பார்க்கும்போது, ​​அநீதி மற்றும் போரினால் மனித குடும்பம் அனுபவிக்கும் துயரங்களுடன் இது எவ்வாறு வேறுபடுகிறது என்பதை இன்னும் ஆழமாகவும் வேதனையாகவும் உணர்கிறோம் என்றும் எடுத்துக்காட்டினார்.

உடன்பிறந்த உறவைக் கட்டியெழுப்ப வேண்டிய கடமையை நாம் அவசரமாக உணர்கிறோம் என்று கூறிய திருத்தந்தை, நமது இறைவேண்டலையும், நமது அர்ப்பணிப்பையும், அன்னை கன்னி மரியா மற்றும் அனைத்துப் புனிதர்களின் பரிந்துரையின் கீழ் ஒப்படைப்போமாக! என்று கூறி தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி தனது மூவேளை செப உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 நவம்பர் 2025, 15:41