தேடுதல்

திருத்தந்தை லியோ குறித்த ஆவணப்படம் வெளியீடு

நவம்பர் 10, திங்கள்கிழமையன்று, உள்ளூர் நேரம் (உரோமை) மாலை 6:00 மணிக்கு வெளியிடப்படும் இந்த ஆவணப்படம் வத்திக்கான் செய்திகள் யூடியூப் சேனலில் ஆங்கிலம், இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டு, அனைத்துலக ஊடகங்கள் வழியாக இது விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருத்தந்தையாகத் தலைமைப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் நிறைவடையும் வேளை, வத்திக்கான் வானொலியின் செய்தித்தொடர்பகம் – ‘சிகாகோவிலிருந்து லியோ’ என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட உள்ளது. 

நவம்பர் 10, திங்கள்கிழமையன்று, வெளியிடப்படும் இந்த ஆவணப்படம், இராபர்ட் பிரான்சிஸ் பிரெவொஸ்ட் என்ற இயற்பெயரைத் தாங்கியுள்ள திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் சொந்த மண்ணான அமெரிக்காவில் அவரது வாழ்வு, குடும்ப உறவுகள், கல்வி மற்றும் அகுஸ்தினார் துறவற சபை வாழ்வினை குறித்து எடுத்துக்காட்டுகிறது.

இந்த ஆவணப்படம்,  'பெரு நாட்டிலிருந்து லியோ' என்ற தலைப்பில், திருத்தந்தையின் பணி வாழ்வு குறித்து  கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட நிலையில், திருப்பீடத் தகவல் தொடர்புத் துறை, சிகாகோ மறைமாவட்டம் மற்றும் ESNE எனப்படும் கத்தோலிக்கத் தொலைக்காட்சி நிறுவனதுடன் இணைந்து தயாரிக்கப்பட்டுள்ளது.

‘சிகாகோவிலிருந்து லியோ’ என்ற இந்த ஆவணப்படம், பத்திரிகையாளர்கள் Jaime Vizcaíno Har என்பவரால் தொகுக்கப்பட்டு, Deborah Castellano Lubov, Salvatore Cernuzio, மற்றும் Felipe Herrera-Espaliat ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 10, திங்கள்கிழமையன்று, உள்ளூர் நேரம் (உரோமை)  மாலை 6:00 மணிக்கு வெளியிடப்படும் இந்த ஆவணப்படம் வத்திக்கான் செய்திகள் யூடியூப் சேனலில் ஆங்கிலம், இத்தாலி மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மூன்று மொழிகளில் வெளியிடப்பட்டு, அனைத்துலக ஊடகங்கள் வழியாக இது விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 நவம்பர் 2025, 14:51