தேடுதல்

புதிய பேராயர் கிளாடியு-லூசியன் பாப் புதிய பேராயர் கிளாடியு-லூசியன் பாப் 

உங்கள் பணியில் முன்னோடிகளின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்

உரோமானிய கிரேக்க - கத்தோலிக்க திருஅவையைப் பராமரிப்பதில் உங்கள் முன்னோடிகளின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள் : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அன்பான சுய் யூரிஸ் திருஅவையின் தந்தையாகவும் தலைவராகவும், உங்களுக்கு அருளப்பட்ட பேறுகள் கிறிஸ்துவின் இதய எண்ணங்கள்படி, உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையைப் பராமரிக்கும் ஒரு மேய்ப்பராகப் பணியாற்ற உங்களுக்கு உதவட்டும் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

உரோமானியர்களின் ஃபாகாராஸ் மற்றும் ஆல்பா யூலியாவின் முக்கிய புதிய பேராயராக கிளாடியு-லூசியன் பாப் அவர்கள் தேர்வுசெய்யப்பட்டதையொட்ட, நவம்பர் 6, வியாழனன்று, அவருக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

அவரது புதிய பணியில் தூய ஆவியார் அவரை நல்வழிநடத்த வேண்டும் என்று வாழ்த்துக்களையும் இறைவேண்டல்களையும் தெரிவிப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை, உரோமானிய கிரேக்க - கத்தோலிக்க திருஅவையைப் பராமரிப்பதில் அவரது முன்னோடிகளின் முன்மாதிரியைப் பின்பற்றுமாறு பேராயர் பாப்பை தனது வாழ்த்துச் செய்தியில் ஊக்குவித்துள்ளார்.

ஆயர் பேரவை, தலத்திருஅவையினர், இருபால் துறவியர், அருள்பணித்துவ மாணவர்கள் மற்றும் பொதுநிலை விசுவாசிகள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன், அன்னை கன்னி மரியாவின் பரிந்துரையை வேண்டி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கி இந்த வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 நவம்பர் 2025, 16:18