தேடுதல்

சூப்பர் தைஃபூன் ஃபங்-வொங் புயல் சூப்பர் தைஃபூன் ஃபங்-வொங் புயல்  (AFP or licensors)

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்காக செபிக்க திருத்தந்தை அழைப்பு!

திருத்தந்தை தனது உரையில், போரில் உயிரிழந்தவர்களை, குறிப்பாக குழந்தைகள், வயது முதிர்ந்தோர்,மற்றும் நோயாளர்களை அன்புடன் நினைவுகூர வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் போர்நிறுத்தம் அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் வழியாகவே சாத்தியம் என்றும் குறிப்பிட்டார்

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

போரால் சிதைந்த பகுதிகளில் அமைதிக்காகப்  பாடுபடும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்ட அதேவேளை, சூப்பர் தைஃபூன் ஃபங்-வொங் என்ற புயல் கடுமையாகத் தாக்கிய பிலிப்பைன்ஸ் நாட்டுக்காகவும் இறைவேண்டல் செய்வதாகவும் கூறினார்  திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 9, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு வழங்கிய மூவேளை இறைவேண்டல் உரைக்குப் பிறகு இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.

இந்தப் புயல் 185 கிலோமீட்டர் (115 மைல்) வேகத்தில் வீசியதால், 10 இலட்சத்திற்கும்  மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு, பெரும் சேதங்கள் ஏற்பட்டன. அதனால் உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் ஆகியோருக்காக  திருத்தந்தை இறைவேண்டல் செய்தார்.

போரில் உயிரிழந்தவர்களை, குறிப்பாக குழந்தைகள், வயது முதிர்ந்தோர்,மற்றும் நோயாளர்களை அன்புடன் நினைவுகூர வேண்டும் என்றும் வலியுறுத்திய திருத்தந்தை, போர்நிறுத்தம் அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் வழியாகவே சாத்தியம் என்றும் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 நவம்பர் 2025, 14:58