தேடுதல்

திருத்தந்தையின் செய்தியாளர்கள் சந்திப்பு திருத்தந்தையின் செய்தியாளர்கள் சந்திப்பு  

புலம்பெயர்ந்தோரின் ஆன்மிக உரிமைகள்' மதிக்கப்பட வேண்டும்

இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது, அமெரிக்கா-வெனிசுலா பதட்டங்கள், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி, தொழிலாளர்களின் உரிமைகள், முன்னாள் இயேசு சபைப் பணியாளர் மார்கோ ரூப்னிக் மீதான வத்திக்கான் விசாரணை குறித்தும் உரையாடினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தடுப்புக்காவலில் உள்ள புலம்பெயர்ந்தோரின் ஆன்மிக உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களின் மேய்ப்புப் பணிக்கான உதவிகள் தடையின்றி கிடைக்கப்பெற வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 4, இச்செவ்வாயன்று திருத்தந்தையர்களின் கோடை ஓய்வு இல்லமான காஸ்தல் கந்தோல்போவில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வேளை இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.

அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோர் நடத்தப்படும் விதம் குறித்து ஆழ்ந்து சிந்திக்க அழைப்பு விடுத்த திருத்தந்தை,  பெருமளவிலான நாடுகடத்தல்களையும், தடுத்து வைக்கப்பட்டுள்ள கத்தோலிக்க புலம்பெயர்ந்தோருக்கு ஆன்மிகக பராமரிப்பு மறுக்கப்படுவதையும் விமர்சித்தார்.

அமெரிக்கா-வெனிசுலா பதட்டங்கள், மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி, தொழிலாளர்களின் உரிமைகள், முன்னாள் இயேசு சபைப் பணியாளர் மார்கோ ரூப்னிக் மீதான வத்திக்கான் விசாரணை குறித்தும் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 நவம்பர் 2025, 15:57