திருத்தந்தையின் இரண்டாம் நாள் நிகழ்வுகள்
முதல் திருச்சங்கமான, நீசேயா திருச்சங்கத்தின் 1700-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல்வேறு தலத்திருஅவைகளின் தலைவர்களுடன் இணைந்து இறைவேண்டல் செய்தார் திருத்தந்தை.
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
நவம்பர் 28, வெள்ளிக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மாலை 03.30 மணிக்கு, அதாவது, இந்திய இலங்கை நேரம் மாலை 06.00 மணிக்கு, திரு அவையின் வரலாற்றிலேயே முதல் திருச்சங்கமான, நீசேயா திருச்சங்கத்தின் 1700-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அங்குள்ள பல்வேறு தலத்திருஅவைகளின் தலைவர்களுடன் இணைந்து இறைவேண்டல் செய்தார். அப்போது அவர்களுக்கு அருளுரை ஒன்று வழங்கினார்.
இத்துடன் திருத்தந்தையின் இரண்டாம் நாள் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் நிறைவுபெற்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
29 நவம்பர் 2025, 14:57
