தேடுதல்

திருத்தந்தை திருத்தந்தை   (AFP or licensors)

நைஜீரியா மற்றும் கமரூனில் கடத்தப்பட்டவர்களை விடுவிக்கவும்!

"நைஜீரியா மற்றும் கமரூனில் கடத்தப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், மேலும் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

நவம்பர் 23, இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் சதுக்கத்தில் கிறிஸ்து அரசர் பெருவிழாத் திருப்பலி நிறைவேற்றிய பிறகு, அண்மையில் நைஜீரியா மற்றும் கமரூனில் நடந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அருள்பணியாளர்கள் கடத்தப்பட்ட  சம்பவங்களைப் பற்றி தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார் திருத்தந்தை பதிநான்காம் லியோ..

மேலும் கடத்தப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த திருத்தந்தை, கோவில்களும் பள்ளிகளும் எப்போதும் பாதுகாப்பான இடங்களாக இருக்க வேண்டும் என்று இறைவேண்டல் செய்யுமாறு  விசுவாசிகளிடம் கேட்டுக்கொண்டார்.

மூவேளை செப உரைக்குப் பிறகு, உக்ரைன் திருப்பயணிகளை வாழ்த்திய திருத்தந்தை, விரைவில் இடம்பெறவுள்ள தனது  துருக்கி மற்றும் லெபனான் திருத்தூதுப் பயணத்தைப் பற்றியும் பேசினார்.

இறுதியாக, நீசேயா திருச்சங்கத்தின் 1700-ஆம் ஆண்டு நினைவாக இடம்பெறும் இந்தத் திருத்தூதுப் பயணம், கிறிஸ்தவ ஒன்றிப்பு பற்றிய தனது புதிய திருமடலின் வெளியீட்டுடன் தொடர்புடையது என்று மொழிந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 நவம்பர் 2025, 15:17