இளையோர் திருவிவிலியத்தை எளிதாக அணுக வாய்ப்புகள் வேண்டும்!
ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்
நவம்பர் 17, இத்திங்களன்று, கத்தோலிக்க விவிலியக் கூட்டமைப்பினருடன் திருப்பீடத்தில் நிகழ்ந்த சந்திப்பொன்றில், திருவிவிலியத்தை அனைவரும், குறிப்பாக இன்றைய நவீன யுகத்தில் இளையோர் எளிதில் அணுகக்கூடியதாக செய்ய வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
இறைவெளிப்பாடு குறித்த இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்க ஏட்டின் 60- வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வேளை, இவ்வாறு வலியுறுத்திய திருத்தந்தை, அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் இறை வார்த்தையை எளிதில் அணுகுவதற்கான அந்த ஆவணத்தின் அழைப்பை எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
திருஅவையின் மையமாகத் திகழும் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் பணியைத் தொடருமாறு விவிலிய அறிஞர்களை வலியுறுத்திய திருத்தந்தை புதிய தலைமுறையினர், குறிப்பாக எண்மமுறை (டிஜிட்டல்) தளங்களில், திருவிவிலியத்தின் மூலம் கடவுளின் அன்பை அனுபவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை
இறைவார்த்தையை அறியாத மக்களுக்கு, குறிப்பாக நற்செய்தி திரித்துக் கூறப்பட்ட சூழல்களில், புதிய வடிவிலான நற்செய்தி அறிவிப்புப் பணிகளுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.
இறுதியாக, தூய ஆவியால் வழிநடத்தப்பட்டு, இறைவார்த்தையின் உயிருள்ள எழுத்துக்களாக வாழ அனைத்துக் கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு விடுத்த திருத்தந்தை, இறைவார்த்தையின்மீதான நமது கீழ்ப்படிதலை ஆழப்படுத்த அன்னை கன்னி மரியாவின் பரிந்துரையை வேண்டி தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
