செயற்கை நுண்ணறிவு மனித மனித மாண்பைப் பாதுகாக்க வேண்டும்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
"நலவாழ்வு பராமரிப்பில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அக்கறை மற்றும் உறவுகளின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
“செயற்கை நுண்ணறிவு மற்றும் மருத்துவம்: மனித மாண்பின் சவால்” என்ற தலைப்பில் நவம்பர் 10 முதல் 12 வரை வத்திக்கானில் இடம்பெற்றுவரும் மாநாடு ஒன்றின் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பிய செய்தியொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ள திருத்தந்தை, தொழில்நுட்பத்தை அதிகமாக நம்பியிருப்பது மக்களை ஒருவருக்கொருவர் தூர விலக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவின் மருத்துவ நன்மைகளை அங்கீகரிக்கும் அதேவேளையில், உண்மையான முன்னேற்றம் மனித மாண்பையும் பொது நன்மையையும் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
நலவாழ்வுத் துறையில் பணியாற்றும் நிபுணர்கள் செயற்கை நுண்ணறிவைப் பொறுப்புடன் பயன்படுத்தவும், நோயாளர்களுடன் இரக்கம், தொடர்பு மற்றும் தனிப்பட்ட உறவுக்கு முன்னுரிமை அளிக்கவும் பங்கேற்பாளர்களை நினைவூட்டியுள்ளார் திருத்தந்தை.
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் பொருளாதார நாட்டங்கள் ஆதிக்கம் செலுத்துவதை எச்சரித்துள்ள திருத்தந்தை, அது உண்மையிலேயே மனிதகுலத்திற்கு சேவை செய்வதை உறுதிசெய்ய மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் அரசியல் இடையே உலகளாவிய ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்தார்.
நவம்பர் 10 முதல் 12 வரை வத்திக்கானில் இடம்பெற்றுவரும் இந்த மாநாட்டை திருப்பீட வாழ்வுக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
