தேடுதல்

திருத்தந்தை லியோ திருத்தந்தை லியோ   (AFP or licensors)

அருள்பணித்துவம் என்பது கடவுள் வழங்கியுள்ள முழுமையான கொடை!

இறைவனுடனான தங்கள் உறவை ஆழப்படுத்துவதே அருள்பணித்துவ பயிற்சி இல்லத்தின் முதன்மையான குறிக்கோள் : திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இயேசுவுடன் தங்க, அவர் உங்களை உருவாக்க, அவரை அறிந்து அன்புகூர்ந்திட, அவரைப் போல இருக்க அருள்பணித்துவ பயிற்சி இல்லம் எப்போதும் கற்பிக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 5, இப்புதனன்று, ட்ருஜிலோவின் உயர் மறைமாவட்ட அருள்பணித்துவப் பயிற்சி இல்லத்தின் 400 ஆண்டுகால வரலாற்றைக் குறிக்கும் நிகழ்வொன்றிற்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியொன்றில் இவ்வாறு உரைத்துள்ளார் திருத்தந்தை.

அருள்பணித்துவப் பயிற்சியாளர்கள் தங்கள் உண்மையான நோக்கங்களை ஆராய வேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை. அருள்பணித்துவத்திற்கான பதவி என்பது ஒரு தனிப்பட்ட இலட்சியமோ அல்லது வாழ்க்கையின் சவால்களில் இருந்து தப்பிப்பதற்கானதோ அல்ல, மாறாக ஒருவரின் வாழ்க்கையின் முழுமையான கொடை என்பதை அவர்களுக்கு நினைவூட்டினார்.

அருள்பணியாளரை வெறும் அதிகாரத்துவப் பாத்திரமாகவோ அல்லது தனிப்பட்ட பிரச்சனைகளுக்கான தீர்வாகவோ பார்ப்பதற்கு எதிராக எச்சரித்த திருத்தந்தை, அத்தகைய உந்துதல்களைக் கொண்டவர்கள் பலவீனமான அடித்தளங்களில் கட்டமைக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

உள் மாற்றத்திற்கான பயணத்தைக் கொண்ட அருள்பணித்துவ வாழ்க்கைக்கு இறைவேண்டல் மற்றும் படிப்புடன் கூடிய அக ஆய்வு, நேர்மை மற்றும் ஆன்மிக வளர்ச்சி தேவை என்று விவிரித்த திருத்தந்தை, அற்பத்தனம், உலகியல் மற்றும் தனிமையை அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள் தவிர்க்குமாறு ஊக்குவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 நவம்பர் 2025, 16:22