தேடுதல்

திருத்தந்தை திருத்தந்தை  

பொருளாதாரமும் வணிகமும் பொது நன்மைக்காகச் செயல்பட வேண்டும்!

"வணிகங்கள் மனித மேம்பாடு, சமூக உள்ளடக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பை ஊக்குவிக்க வேண்டும்" : திருத்தந்தை பதினான்காம் லியோ

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அர்ஜென்டினா நாட்டின் தலைநகரம் புவெனஸ் ஐரிஸ் நகரில் இடம்பெற்ற 31-வது தொழில்துறை மாநாட்டிற்கான தனது செய்தியில், பொருளாதாரமும் வணிகமும் பொது நன்மைக்காகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

நவம்பர் 13, இவ்வியாழனன்று அனுப்பியுள்ள இச்செய்தியில், தொழிலாளர்களின் மாண்பு, நியாயமான ஊதியங்கள் மற்றும் மனிதாபிமான வேலை நிலைமைகளையும் கோடிட்டுக் காட்டியுள்ள திருத்தந்தை, வணிகங்கள் மனித மேம்பாடு, சமூக உள்ளடக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பை ஊக்குவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொழிலாளர்களின் நல்வாழ்வை ஆதரிப்பதற்காக விசுவாசத்தை வணிகத்துடன் ஒருங்கிணைப்பதற்கு அர்ஜென்டினா தொழிலதிபர் என்ரிக் ஷாவை ஓர் உதாரணமாக குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அன்பு மற்றும் நீதியால் உந்தப்பட்ட வணிகத் தலைவர்களுக்கு அழைப்புவிடுத்ததுடன், அனைவருக்கும் சேவை செய்யும் பொருளாதாரத்தை வளர்க்கவும் அவர்களை வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 நவம்பர் 2025, 14:34