தேடுதல்

ஹங்கேரி அதிபர் தமாஸ் சுல்யோக் அவர்களுடன் திருத்தந்தை ஹங்கேரி அதிபர் தமாஸ் சுல்யோக் அவர்களுடன் திருத்தந்தை   (ANSA)

வலுக்குறைந்த கிறிஸ்தவச் சமூகங்களைப் பாதுகாக்க திருத்தந்தை அழைப்பு!

இந்தச் சந்திப்பின்போது, குடும்ப அமைப்பின் முக்கியப் பங்கு மற்றும் உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ள கிறிஸ்தவ சமூகங்களைப் பாதுகாப்பது போன்றவை முக்கியத்துவம் பெற்றன.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

பிப்ரவரி 21, சனிக்கிழமையன்று, ஹங்கேரி அதிபர் தமாஸ் சுல்யோக் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

இந்தச் சந்திப்பு ஹங்கேரி மற்றும் வத்திக்கான் இடையிலான வலுவான இருதரப்பு உறவுகளை உறுதிப்படுத்திய அதேவேளை, ஹங்கேரியின் சமூக வாழ்க்கையில் கத்தோலிக்கத் திருஅவையின் முக்கிய பங்களிப்பை இந்த உரையாடல்கள் எடுத்துரைத்தன.

திருத்தந்தையுடனான இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, ஹங்கேரி அதிபர் சுல்யோக் அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் மற்றும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் துணைச் செயலர் பேரருள்திரு Mihăiță Blaj ஆகியோருடன் கலந்துரையாடினார்.

இந்தக் கலந்துரையாடல்கள் பொதுவான நலன்கள் குறித்து அமைந்திருந்தன. குறிப்பாக, குடும்ப அமைப்பின் முக்கியப் பங்கு மற்றும் உலகம் முழுவதும் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் உள்ள  கிறிஸ்தவ சமூகங்களைப் பாதுகாப்பது போன்றவை இதில் முக்கியத்துவம் பெற்றன.

தற்போதைய உலகளாவிய மோதல்கள் குறித்தும் இந்த விவாதங்களில் ஆலோசிக்கப்பட்டது. அமைதியை நிலைநாட்டவும், விரிவான அனைத்துலக ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தரப்பினரும் தங்களது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 பிப்ரவரி 2026, 11:43