தேடுதல்

புதிய காணொளி சாளரம் குறித்த திருத்தந்தையின் செய்தி புதிய காணொளி சாளரம் குறித்த திருத்தந்தையின் செய்தி  

கத்தோலிக்க வலைத்தளங்களுக்கான புதிய காணொளி சாளரம்!

இந்தக் காணொளி சாளரம், நிகழ்நேர வீடியோ உள்ளடக்கம் (real-time video content), வத்திக்கான் செய்திகளின் அண்மைய செய்திகள் மற்றும் வத்திக்கான் மற்றும் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களான Vatican.va: L'Osservatore Romano, and Vatican Radio ஆகியவற்றிற்கான நேரடி இணைப்புகளையும் கொண்டுள்ளது.

ஜான்சி ராணி அருளாந்து - வத்திக்கான்

திருஅவை மற்றும் திருப்பீடம் குறித்த உடனுக்குடனான செய்திகள் மற்றும் காணொளிகளை வழங்குவதற்காக, வத்திக்கான் செய்திகளின் புதிய காணொளி சாளரத்தை (video widget) மறைமாவட்ட, பங்கு மற்றும் கத்தோலிக்க நிறுவனங்களின் இணையதளங்களில் இணைக்குமாறு உலகெங்கிலும் உள்ள ஆயர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

பிப்ரவரி 18, புதனன்று, ஆயர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, இந்த முயற்சியை உள்ளூர் திருஅவைகளுக்கும் உரோமைக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் 'நற்செய்தி அறிவிப்புக்கான ஒரு கருவி' என்று குறிப்பிட்டுள்ளார்.

இலவசமாகக் கிடைக்கும் இந்த காணொளி சாளரம், தானாகவே தகவல்களைப் புதுப்பிக்கும் திறன் கொண்டது. பயனர்கள் ஓர் எளிய குறியீட்டை (copy-paste code) கொண்டு இணையதளத்தில் இணைப்பதற்கு முன்னதாக, அதன் மொழி, வடிவம் மற்றும் எழுத்துரு ஆகியவற்றைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்கலாம்.

இது குறித்துப் பேசுகையில் சமூகத் தொடர்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர் முனைவர் பவுலோ ருஃபினி அவர்கள், "இந்தக் காணொளி சாளரத்தைப் பரவலாகப் பயன்படுத்துவது, உரோமையின் ஆயரான திருத்தந்தையுடன் ஒன்றிப்பை எடுத்துக் காட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "பயனர்களை அதிகாரப்பூர்வ ஆதாரங்களுக்கு நேரடியாக அழைத்துச் செல்வதன் வழியாக, தவறான தகவல்களைத் தடுப்பதற்கும் இந்தக் கருவி உதவும்" என்று வத்திக்கான் செய்தித் தொடர்புத் துறையின் ஆசிரியர் அந்திரேயா தொர்னியெல்லி அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளி சாளரம், நிகழ்நேர வீடியோ உள்ளடக்கம் (real-time video content), வத்திக்கான் செய்திகளின் அண்மைய செய்திகள் மற்றும் வத்திக்கான் மற்றும் திருப்பீடத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளங்களான  Vatican.va: L'Osservatore Romano, and Vatican Radio ஆகியவற்றிற்கான நேரடி இணைப்புகளையும் கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 பிப்ரவரி 2026, 11:25