தேடுதல்

திருத்தந்தை திருத்தந்தை  (ANSA)

பேச்சுவார்த்தை மூலம் அமைதியைத் தேடுங்கள்!

வன்முறை, ஏழைகள் நசுக்கப்படுவது, இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது மற்றும் போரின் கோரத்தாண்டவம் என மரணத்தின் நிழல் எங்கும் தெரிந்தாலும், உயிர்ப்பு பெருவிழா ஆண்டவர் உயிரோடு இருக்கிறார்; அவர் நம்மோடு இருக்கிறார் என்ற செய்தியை நமக்குச் சொல்கிறது : திருத்தந்தை

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

உயிர்ப்புப் பெருவிழா ஒளியால் நிறைந்த ஒரு திருவிழிப்பு வழிபாடு என்றும் கிறிஸ்தவ பாரம்பரியத்திலேயே மிகவும் பழமையான இவ்வழிபாடு, அனைத்து திருவிழிப்பு வழிபாடுகளின் தாய் என்று அழைக்கப்படுகிறது என்றும் தனது X தள‌த்தில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் இந்த குறுஞ்செய்தியை பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்! அவரோடு இணைந்து நாமும் புதிய வாழ்வு வாழ திருத்தந்தை அழைப்பு விடுக்கிறார்.

மேலும் வன்முறை, ஏழைகள் நசுக்கப்படுவது, இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது மற்றும் போரின் கோரத்தாண்டவம் என மரணத்தின் நிழல் எங்கும் தெரிந்தாலும், உயிர்ப்பு பெருவிழா ஆண்டவர் உயிரோடு இருக்கிறார்; அவர் நம்மோடு இருக்கிறார் என்ற செய்தியை நமக்குச் சொல்கிறது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

இன்றும் பல கல்லறைகள் திறக்கப்படாமல் உள்ளன என்று பதிவிட்டுள்ள திருத்தந்தை, நம் இதயங்களை அழுத்தும் பயம், சுயநலம், கசப்புணர்வு மற்றும் நம்பிக்கையின்மை போன்ற கனமான கற்களைப் புரட்டித் தள்ள வேண்டியுள்ளது என்றும், இவைதான் போர், அநீதி மற்றும் நாடுகளுக்கு இடையே பிரிவினையை உண்டாக்குகின்றன , இந்தத் தடைகளைக் கண்டு நாம் தளர்ந்துவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிறிஸ்துவின் அமைதியால் நாம் மாற்றம் பெற அனுமதிப்போம் என்று பதிவிட்டுள்ள திருத்தந்தை, நம் இதயங்களிலிருந்து எழும் அமைதிக்கான குரலை ஒலிக்கச் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

ஆட்சி செலுத்தும் மனப்பான்மையை கொண்டிருக்காமல் மனம் திறந்த பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே உண்மையான அமைதியைக் கொண்டுவர முடியும் என்றும் கிறிஸ்துவின் அமைதி நம்மை மாற்றட்டும் என்றும் தெரிவித் துள்ளார்.

இக்கருத்திற்காக ஏப்ரல் 11 , சனிக்கிழமையன்று இங்குள்ள புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில்  நாம் கொண்டாடவிருக்கும் அமைதிக்கான செப வழிபாட்டில் என்னுடன் இணைய அனைவரையும் அழைக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 ஏப்ரல் 2026, 15:50