தேடுதல்

 திருஇருதய பேராலயம் திருஇருதய பேராலயம் 

மியான்மரின் டவுங்ஙு மறைமாவட்டத்திற்கு புதிய இணை ஆயர் நியமனம்

மியான்மரின் சோண்டு ‘இறையன்னை’ ஆலயப் பங்குத்தந்தையும், லொய்கா மறைமாவட்டத்தின் அருள்பணியாளருமான பெர்னார்டினோ நே நே அவர்களை, டவுங்ஙு மறைமாவட்டத்தின் புதிய இணை ஆயராக திருத்தந்தை அவர்கள் நியமித்துள்ளார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், தற்போது மியான்மர் நாட்டின் சோண்டு என்னும் பங்கில் உள்ள இறையன்னை ஆலயத்தின் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வரும் லொய்கா மறைமாவட்டத்தின் அருள்பணியாளரான பெர்னார்டினோ நே நே அவர்களை டவுங்ஙு மறைமாவட்டத்தின் இணை ஆயராக நியமித்துள்ளார்.

ஆயர் பெர்னார்டினோ நே நே அவர்கள் 1970 ஆம் ஆண்டு மே 20 ஆம் தேதி லொய்கா மறைமாவட்டத்திலுள்ள லொய்காவில் பிறந்தார். டவுங்ஜியில் உள்ள புனித தெரசா இளம் குருத்துவக் கல்லூரியில் பயின்ற பிறகு, பிய்ன் ஊ லூவினில் உள்ள புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரியில் மெய்யியலையும், யாங்கூனில் உள்ள புனித யோசேப்பு குருத்துவக் கல்லூரியில் இறையியலையும் பயின்றார்.

பின்னர் 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் நாள் லொய்கா மறைமாவட்டத்திற்காகக் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயர் பெர்னார்டினோ நே நே அவர்கள் 1995 முதல் 1999 வரை திமோசோவில் உள்ள புனித யோசேப்பு ஆலயத்தின் உதவி பங்குத் தந்தையாகவும் 1999 முதல் 2002 வரை காபேவில் உள்ள அமல அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தையாகவும் 2003 ஆம் ஆண்டு டவுங்கன்காவில் உள்ள அமைதியின் அரசியான அன்னை ஆலயத்தின் உதவி பங்குத் தந்தையாகவும் பணியாற்றியுள்ளார்.

2003 முதல் 2005 வரை உரோமில் உள்ள திருத்தந்தை அல்போன்சியன் கல்விக்கூடத் தில் அறநெறி இறையியலில் உரிமப் பட்டம் பெற்ற பிறகு மீண்டும் 2005 ம் ஆண்டு காபேவில் உள்ள அமல அன்னை ஆலயத்தின் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார்.

2006 முதல் 2014 வரை லொய்கா மறைமாவட்டத்தின் புனித பேதுரு இடைநிலை குருத்துவக் கல்லூரியின் அதிபராகவும் 2015 முதல் 2024 வரை மியான்மரின் பாப்பிறை மறைப்பணி அமைப்புகளின் தேசிய இயக்குநராகவும் 2025 ஆம் ஆண்டு யாங்கூனில் உள்ள லொய்கா மறைமாவட்ட இல்லத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.

2025 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸில் உள்ள மணிலாவில் கிழக்கு ஆசிய மேய்ப்புப்பணி நிறுவனத்தில் (EAPI) மறுபுதுக்கப் பயிற்சி ( Refresher Course ) பெற்ற இவர் தற்போது சோண்டுவில் உள்ள இறையன்னை ஆலயத்தின் பங்குத்தந்தையாகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிபிடத்தக்கது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 மே 2026, 14:56