தேடுதல்

திருத்தந்தை 14ஆம் லியோ திருத்தந்தை 14ஆம் லியோ 

திருத்தந்தையின் முதல் திருமடல் மே 25-ல் வெளியீடு!

மே 25, திங்களன்று, செயற்கை நுண்ணறிவு (AI) காலத்தில் மனித மாண்பைப் பாதுகாப்பது குறித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் முதல் திருமடலான 'மகத்தான மனிதநேயம்'(Magnifica humanitas), வத்திக்கானில் வெளியாகிறது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மே 25, திங்களன்று, செயற்கை நுண்ணறிவு (AI) காலத்தில் மனித மாண்பைப் பாதுகாப்பது குறித்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின்  'உன்னத மனிதமாண்பு' (Magnifica humanitas) என்ற முதல் திருமடல் வெளியிடப்பட உள்ளது.

இத்திருமடல், திருத்தந்தை பதின்மூன்றாம் லியோ அவர்களின் 'ரேரும் நோவாரும்' திருமடலின் 135-வது ஆண்டு நினைவாக, மே 15-ஆம் தேதியிட்ட திருத்தந்தை அவர்களின் கையொப்பத்துடன் இத்திருமடல் வெளியாகிறது.

மகத்தான மனிதநேயம் (Magnifica humanitas) திருமடல் வெளியாகும் அதே நாளில் முற்பகல் மணி 11:30 க்கு வத்திக்கானில் உள்ள ஆயர்கள் மாமன்ற அரங்கில் பொதுமக்களுக்கு முறைப்படி அறிமுகப்படுத்தப்படும்.

திருத்தந்தை முன்னிலையில் நடைபெறவுள்ள இவ்வெளியீட்டு நிகழ்வில், நம்பிக்கைக் கோட்பாட்டிற்கான திருப்பீடத்தின் தலைவர், விக்டர் பெர்னாண்டஸ் மற்றும் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான திருப்பீடத்தின் தலைவர் மைக்கேல் செர்னி, பிரிட்டனின் தர்காம் பல்கலைக்கழக இறையியல் துறைப் பேராசிரியர் அன்னா ரோலண்ட்ஸ், ஆந்த்ரோபிக்' (Anthropic) நிறுவனத்தின் இணை நிறுவனரும், செயற்கை நுண்ணறிவின் விளக்கத்தன்மை குறித்த ஆராய்ச்சித் தலைவருமான கிறிஸ்டோபர் ஓலா மற்றும் அமெரிக்காவின் சாண்டா கிளாரா பல்கலைக்கழக சேசு சபை இறையியல் பள்ளிப் பேராசிரியர் லியோகாடி லுஷோம்போ I.T. ஆகியோர் உரையாற்றுவர்.

திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் நிறைவுரையாற்றுவார்; அதனைத் தொடர்ந்து திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் உரையாற்றித் தனது திருத்தூது ஆசிரை வழங்குவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 மே 2026, 11:43