தேடுதல்

திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் வத்திக்கான் வானியல் ஆய்வகத்தைச் சந்தித்தார் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள் வத்திக்கான் வானியல் ஆய்வகத்தைச் சந்தித்தார்  (@Vatican Media)

வத்திக்கான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு திருத்தந்தை வருகை!

திருத்தந்தை அவர்கள் செவ்வாய்க்கிழமையன்று காஸ்தல் கந்தோல்போ பகுதியில் அமைந்துள்ள வத்திக்கான் வானியல் ஆராய்ச்சி மையத்திற்கு (Vatican Observatory) வருகை தந்தார். நிலவில் மனிதன் கால் பதித்த 56-வது ஆண்டு விழாவிற்குப் பிறகு, இந்த மையத்திற்கு அவர் வருவது இது இரண்டாவது முறையாகும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மே 19, செவ்வாயன்று, காஸ்தல் கந்தோல்போவில் உள்ள வத்திக்கான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வருகை புரிந்தார். கடந்த ஜூலை 20 அன்று, நிலவில் மனிதன் கால் பதித்த 56-வது ஆண்டு விழாவின் போது அவர் இங்கு வந்திருந்தார். அதைத் தொடர்ந்து, இந்த மையத்திற்கு அவர் வருவது இது இரண்டாவது முறையாகும்.

திருத்தந்தை அவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ஓய்வெடுப்பதற்கும் தன் பணிகளை மேற்கொள்வதற்கும் இந்நகரத்திற்கு வருவது வழக்கம். அங்கு வருகை புரிந்த திருத்தந்தை அவர்களை சகோதரி ரஃபெல்லா பெட்ரினி மற்றும் பொதுச் செயலாளர்களான பேராயர் எமிலியோ நாப்பா, கியூசெப் புக்லிசி-அலிப்ராண்டி ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் இந்த வானியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநரான சேசு சபை அருள்பணியாளர் ரிச்சர்ட் ஆண்டனி டிசோசா மற்றும் அருள்பணியாளர் கை கன்சோல்மாக்னோ ஆகியோரும் அங்கு வந்திருந்தனர்.

அங்கிருந்த சிற்றாலயத்தில் சிறிது நேரம் இறைவேண்டல்  செய்த திருத்தந்தை, அங்கிருந்த துறவறத்தார், அறிவியல் அறிஞர்கள் மற்றும் பிற பணியாளர்களைச் சந்தித்துத் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 மே 2026, 11:19