தேடுதல்

திருத்தந்தை XIV லியோ அவர்கள் சூடான் பிரதமரை சந்தித்த போது திருத்தந்தை XIV லியோ அவர்கள் சூடான் பிரதமரை சந்தித்த போது  (ANSA)

சூடான் அரசுத் தலைவரை சந்தித்த திருத்தந்தை

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், சூடான் அரசுத் தலைவர் திரு. கமில் எல்-தயேப் இத்ரிஸ் அப்தெல்ஹபீஸ் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

மே 11, திங்களன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், சூடான் அரசுத் தலைவர் திரு. கமில் எல்-தயேப் இத்ரிஸ் அப்தெல்ஹபீஸ் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.

திருத்தந்தையுடனான இந்த சந்திப்பிற்கு பிறகு அப்தெல்ஹபீஸ் அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் மற்றும் பன்னாட்டு உறவுகளுக்கான திருப்பீடத் துறையின் துணைச் செயலர் பேரருள்திரு Mihăiță Blaj ஆகியோருடன் கலந்துரையாடினார்.

திருப்பீடத்தின் வெளியுறவுச் செயலகத்தில் இடம்பெற்ற இந்த சுமுகமான உரையாடலின் போது, திருப்பீடத்திற்கும் சூடானுக்கும் இடையிலான உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் நாட்டின் நலனுக்காக உள்ளூர் திருஅவை அளிக்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பு ஆகியவை குறித்து வலியுறுத்தப்பட்டன என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாகப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள சூடானின் கடுமையான நெருக்கடி குறித்தும் இந்த உரையாடலில் ஆலோசிக்கப்பட்டது என்றும் அச்செய்தித்  தொடர்பகம் தெரிவித்துள்ளது.

சூடானில் அமைதியை ஏற்படுத்த உடனடிப் போர்நிறுத்தம், அவசர உதவிகள் மற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் இடையிலான நேர்மையான சமாதானப் பேச்சுவார்த்தை ஆகியவற்றை இச்சந்திப்பு முக்கியமாக வலியுறுத்தியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 மே 2026, 11:25