செப்டம்பர் மாதத்தில் திருத்தந்தையின் பிரான்ஸ் நாட்டுப் பயணம்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
இந்த ஆண்டு செப்டம்பர் 25 முதல் 28 வரை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், பிரான்ஸ் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் பாரிஸ் மற்றும் லூர்து நகரங்களுக்குச் சென்றதற்குப் பிறகு, ஒரு திருத்தந்தை பிரான்ஸ் நாட்டிற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ திருத்தூதுப் பயணம் இதுவாகும் என்றும், பிரான்ஸ் நாட்டின் அதிபர், கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர்கள் மற்றும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் தலைமை இயக்குனர் ஆகியோரின் அழைப்பை ஏற்று இத்திருத்தூதுப் பயணம் அமைந்திருப்பதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏப்ரல் 10, வெள்ளின்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அவர்களை முதன்முறையாக திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் என்றும், அதிபர் மேக்ரான் இதற்குமுன் 2018, 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்தித்துள்ளார் என்றும் அச்செய்தி தொடர்பகம் குறிப்பிட்டுள்ளது.
அதிபர் மேக்ரான் ஏற்கனவே 2018, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்துள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் அதிபர் மேக்ரான் இவ்விருவரும் 2023-இல் மார்சேயிலும், 2024-இல் G7 உச்சிமாநாடு மற்றும் அஜாக்சியோவிலும் சந்தித்துப் பேசியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
