ஆகஸ்ட் 22-ல் சான் மரினோ குடியரசுக்குத் திருத்தந்தை லியோ வருகை!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஆகஸ்ட் 22 சனிக்கிழமை காலையில் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், சான் மரினோ குடியரசுக்கு (Republic of San Marino) வருகை தரவுள்ளதாகத் திருத்தந்தையின் இல்லப் பணியகம் (Prefecture of the Papal Household) தெரிவித்துள்ளது.
மே 28, வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தையின் இல்லப் பணியகம், அடுத்த சில மாதங்களில், திருத்தந்தை அவர்கள் இத்தாலி முழுவதும் ஒருநாள் ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளார் என்றும், இதன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் 22, சனிக்கிழமையன்று, வடக்கு இத்தாலியின் எமிலியா-ரொமானா மாநிலத்தில் உள்ள ரிமினி (Rimini) நகருக்குச் சென்று, அங்கு நடைபெறவிருக்கும் "மக்களுக்கிடையேயான நட்புறவு மாநாட்டின் 47-வது பதிப்பில் (47th edition of the Meeting for Friendship among Peoples) அவர் கலந்துகொள்ளவிருக்கிறார் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, திருத்தந்தை காலையில் சான் மரினோவிற்கும், மதியத்திற்கு மேல் ரிமினி நகருக்கும் பயணம் மேற்கொள்வார் என்றும், சான் மரினோவின் முன்னாள் நாட்டுத் தலைவர்களான மேட்டியோ ரோஸ்ஸி, லோரென்சோ புக்லி ஆகியோரின் அழைப்பை ஏற்றே அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார் என்றும் திருத்தந்தையின் இல்லப் பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
