மாண்பை மீட்டெடுக்கும் இலக்கியம்: திருத்தந்தையின் தூரின் புத்தகக் கண்காட்சி வாழ்த்துச் செய்தி!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
“குழந்தைகளால் காக்கப்படும் உலகம்” என்ற அர்த்தமுள்ள மற்றும் காலத்திற்கேற்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற 38-வது தூரின் பன்னாட்டு புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழாவில் பங்கேற்றவர்களுக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் கையெழுத்திட்ட ஒரு தந்தியின் வாயிலாக இந்த வாழ்த்துச் செய்தியைத் திருத்தந்தை.தெரிவித்துள்ளார்
இந்த செய்தியில் "போரின் கொடூரமும் அலட்சியத்தின் அக்கறையற்ற தன்மையும் சூழ்ந்துள்ள இக்காலத்தில், உலகைப் புதிய கண்களுடன் பார்க்கும் இயல்பான ஆற்றல் கொண்ட குழந்தைகள், சமூகத்திற்குள் ஒரு நம்பிக்கையின் ஒளியை ஏற்றுகிறார்கள்" என்று திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மனிதனின் உன்னத மதிப்பையும், குறிப்பாகச் சமுதாயத்தால் கைவிடப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களின் மாண்பையும் மக்கள் உணர்ந்து கொள்வதற்கு, இலக்கியம் ஒரு முக்கிய கருவியாக அமைய வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
மக்களுக்கு இடையே உரையாடலை (Dialogue) ஊக்குவிப்பதிலும், நல்லிணக்கத்தை (Harmony) நிலைநாட்டும் பாலமாகச் செயல்படுவதிலும் கலாச்சாரம் எவ்வளவு வலிமையானது என்பதை இந்த நிகழ்வு மீண்டும் உலகிற்கு நினைவூட்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இறுதியாக, இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கி செய்தியை திருத்தந்தை நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
