தேடுதல்

திருத்தந்தை பதினான்காம் லியோ திருத்தந்தை பதினான்காம் லியோ   (ANSA)

திருத்தந்தையை கௌரவிக்கும் இசை நிகழ்ச்சி!

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை கௌரவிக்கும் வகையில், அல்பானோ மறைமாவட்டம் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு இசை நிகழ்ச்சி, ஜூலை 18, சனிக்கிழமை, காஸ்தல் கந்தோல்போ அப்போஸ்தலிக்க மாளிகையில் நடைபெறவுள்ளது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களை கௌரவிக்கும் வகையில், அல்பானோ மறைமாவட்டம் ஏற்பாடு செய்துள்ள சிறப்பு இசை நிகழ்ச்சி, ஜூலை 18, சனிக்கிழமை, காஸ்தல் கந்தோல்போ அப்போஸ்தலிக்க மாளிகையில் நடைபெறவுள்ளது.

இரவு 9.00 மணிக்கு மாளிகையின் முற்றத்தில் தொடங்கும் இந்நிகழ்ச்சி, திருத்தந்தையிடம் உள்ள அன்பையும், திருஅவையின் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமையும். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து நுழைவுச்சீட்டுகளும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

அனைத்துலக அளவில் புகழ்பெற்ற வயலின் கலைஞர் மார்கோ ரோக்லியானோ (Marco Rogliano), நிக்கோலோ பகானினியின் புகழ்பெற்ற ‘லா பொலாக்கா’ (La Polacca) இசையை வயலின் மற்றும் ஆர்கெஸ்ட்ராவுக்காக வழங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கவுள்ளார்.

அதைத் தொடர்ந்து, ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் லூயிஸ் பகலோவ், வின்சென்சோ பெல்லினியின் உலகப் புகழ்பெற்ற ‘நோர்மா’ ஓபராவைத் தழுவி, பியானோ கலைஞர் ரொசானா டோமாசி கோல்கருக்காக பிரத்தியேகமாக உருவாக்கிய "நோர்மா: ஆன் இம்மன்ஸ் லவ் ஸ்டோரி – ஃப்ரீ ஃபேண்டஸி அண்ட் வேரியேஷன்ஸ் ஃபார் பியானோ அண்ட் ஆர்கெஸ்ட்ரா" என்ற புதிய இசைவடிவத்தை ரொசானா மேடையில் அரங்கேற்றுகிறார்.

இசை நிகழ்ச்சியில் 55 உறுப்பினர்களைக் கொண்ட ஐ முசிசி டி பார்மா’ (I Musici di Parma) இசைக்குழு, புகழ்பெற்ற இசை இயக்குநர் பியர் கார்லோ ஒரிசியோ தலைமையில் இசையாற்றும். பெல்லினியின் Norma இசைநாடகத்தின் முக்கிய காட்சிகளை பிரதிபலிக்கும் காட்சிப்படத் தயாரிப்பும் இசையுடன் இணைந்து இடம்பெறும். மேலும், Fabbrini Collection-இல் இடம்பெறும் Bechstein கிராண்ட் பியானோ இந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்படவுள்ளது.

“திருத்தந்தை மீண்டும் எங்கள் மறைமாவட்டப் பகுதிக்கு வருகை தந்திருப்பது, எங்கள் உள்ளூர் திருஅவைக்கும் மக்களுக்கும் அளவற்ற மகிழ்ச்சியை அளித்துள்ளது,” என்று அல்பானோ மறைமாவட்ட ஆயர் வின்சென்சோ விவா அவர்கள் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சிக்கு நிதியுதவி வழங்கிய 'பான்கா டி கிரெடிட்டோ கூப்பரேடிவோ டெய் காஸ்டெல்லி ரோமானி இ டெல் டஸ்கோலோ' (Banca di Credito Cooperativo...) வங்கி, உள்ளூர் வணிக நிறுவனங்கள் மற்றும் இந்த நிகழ்வைச் சாத்தியமாக்கிய கலைஞர்கள், திருச்சபை புனித இசை அலுவலகம், திருத்தந்தை வில்லாக்களின் ஊழியர்கள் மற்றும் திருத்தந்தை இல்லத்தின் அதிகாரிகள் ஆகிய அனைவருக்கும் ஆயர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.

17 ஜூலை 2026, 13:08