உரோமில் லியோ ஆவணப்படம் வெளியீடு!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் உரோம் வாழ்வைப் பதிவு செய்யும் "உரோமில் லியோ " (Leo in Rome) என்ற ஆவணப்படத்தை, திருப்பீட தகவல்தொடர்புத்துறையின் தலையங்க இயக்ககம் வெளியிட்டுள்ளது.
திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், இராபர்ட் பிரான்சிஸ் பிரேவோஸ்ட் அவர்கள் உரோம் நகரில் கழித்த ஆண்டுகளை நேர்காணல்கள், காப்பகக் காட்சிகள் மற்றும் அரிய புகைப்படங்கள் வழியாக இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கிறது.
செய்தியாளர்களான பெலிபே ஹெர்ரேரா-எஸ்பாலியாட், சால்வத்தோரே செர்னூசியோ மற்றும் திசியானா கம்பிசி ஆகியோர் தயாரித்துள்ள இந்த ஆவணப்படத்தை, ஜைமே விஸ்காயினோ ஆரோ தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்.
