தேடுதல்

"மேய்ப்புப்பணியாளரும், இறையியலாளருமான பிரான்சிஸ்" - புதிய நூல் "மேய்ப்புப்பணியாளரும், இறையியலாளருமான பிரான்சிஸ்" - புதிய நூல் 

"மேய்ப்புப்பணியாளரும், இறையியலாளருமான பிரான்சிஸ்"

"மேய்ப்புப்பணியாளரும், இறையியலாளருமான பிரான்சிஸ்" என்ற தலைப்பில், திருத்தந்தையின் எண்ணங்களை மையப்படுத்திய ஒரு நூலை, வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்டது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"மேய்ப்புப்பணியாளரும், இறையியலாளருமான பிரான்சிஸ்" என்ற தலைப்பில், திருத்தந்தையின் எண்ணங்களை மையப்படுத்திய ஒரு நூலை, செப்டம்பர் 22 இப்புதனன்று, வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்டது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள உரைகளிலும், எழுதியுள்ள நூல்கள், மற்றும் மடல்களிலும் வெளிப்படும் இறையியல் மற்றும் மேய்ப்புப்பணி சார்ந்த சிந்தனைகளை, ஸ்பெயின் நாட்டின் பார்சலோனாவில் உள்ள Sant Pacià பல்கலைக் கழகத்தில் 2019ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கருத்தரங்கில், பல அறிஞர்கள் பகிர்ந்துகொண்டனர்.

இந்தக் கருத்தரங்கில் பகிர்ந்துகொள்ளப்பட்ட உரைகளைத் தொகுத்து, "மேய்ப்புப்பணியாளரும், இறையியலாளருமான பிரான்சிஸ்" என்ற நூலை வத்திக்கான் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

திருஅவை எப்போதும் தன்னிலையிலிருந்து வெளியேறி, விளிம்புகளுக்குச் செல்லவேண்டும் என்று வலியுறுத்திவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மேய்ப்புப்பணி அக்கறையும், அவரது இறையியல் சிந்தனைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளதாக இந்தப் பதிப்பகத்தின் குறிப்பு கூறுகிறது.

விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவரான கர்தினால் Luis Ladaria, ஜெர்மன் இறையியலாளரான கர்தினால் Walter Kasper, இத்தாலியின் பொலோஞ்ஞா உயர்மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் Matteo Maria Zuppi, இந்தியாவின் வசாயி பேராயர் Felix Machado, மற்றும் உரோம் நகரில் இறையியல் பேராசிரியர்களாக பணியாற்றும், அருள்பணி Maurizio Gronchi, Prem Xalxo ஆகியோர் உட்பட, 14 பேர் வழங்கியுள்ள கருத்துக்களின் தொகுப்பு, இந்நூலில் இடம்பெற்றுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2021, 13:56