தேடுதல்

“Angels Unawares” என்ற சிற்பம் “Angels Unawares” என்ற சிற்பம் 

புலம்பெயர்ந்தோர் பற்றி அறிய புதிய குறியீடு

புனித பேதுரு சதுக்கத்தில் உள்ள சிற்பத்தில் புலம்பெயர்ந்தோர், மற்றும் குடிபெயர்ந்தோர், திருத்தந்தையின் போதனைகள் பற்றி தெரிவிக்க QR குறியீடு நிறுவப்பட்டுள்ளது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

2019ம் ஆண்டு செப்டம்பரில் 105வது உலக புலம்பெயர்ந்தோர் தினம் கொண்டாடப்பட்டபோது, திருத்தத்தை பிரான்சிஸ் அவர்களால் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் திறந்து வைக்கப்பட்ட “Angels Unawares” என்ற சிற்பம் தொடர்புடைய விவரங்களை திருப்பயணிகளுக்கு வழங்கும் வகையில், QR குறியீடு ஒன்று அச்சிற்பத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

அலைபேசி மூலம் இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வழியாக, "Angels Unawares"  இணையதளம், ஆங்கிலம், இஸ்பானியம், பிரஞ்சு, போர்த்துகீசியம், ஜெர்மன் ஆகிய ஐந்து மொழிகளில் கிடைப்பதுடன், சிற்பத்தை பார்வையிடுபவர்கள் அதனை உருவாக்கிய கலைஞர், படைப்பு, மற்றும் அதன் வரலாறு பற்றி மேலும் அறிந்து கொள்ளவும், அதேநேரத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனைகள் மூலமும், பார்வையாளர்கள் புலம்பெயர்ந்தோரின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்துப் பேசிய புலம்பெயர்ந்தோர் பிரிவின் துணைச் செயலாளர் கர்தினால் மைக்கேல் செர்னி அவர்கள், வத்திக்கானில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்கள் திருப்பயணிகளாக மாறுவதற்கு, கடந்த சில ஆண்டுகளாகக் கலாச்சார தகவல் மற்றும் திருஅவையின் போதனைகளை இணைக்க முடிவு செய்துள்ளோம், என்றார்.

இந்தப் புதிய QR குறியீடானது, சிற்பத்தைப் பாராட்டவும், ஆழ்ந்த வாசிப்புக்குச் செல்லவும்,  கலை ரீதியாக வெளிப்படுத்தப்படும் மனித இயக்கத்தின் யதார்த்தத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவுகிறது.

கனடா நாட்டு  சிற்பக் கலைஞர் திமோத்தி பி. ஷ்மால்ஸ் (Timothy P. Schmalz) அவர்களின் படைப்பு, திருக்குடும்பம் முதல் நவீன கால அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வரை பலதரப்பட்ட மக்கள் கூட்டத்தை சித்தரிக்கிறது.

இந்தச் சிற்பத்தின் மையத்திலிருந்து ஒரு வானதூதரின் இரு இறக்கைகள் எழுவதாகக் காட்டப்பட்டுள்ளது, புனிதத்தின் இருப்பை விளக்குகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 December 2021, 16:54