தேடுதல்

செபமாலை செபிக்கும் மக்கள் செபமாலை செபிக்கும் மக்கள்  (ANSA)

வத்திக்கான் வளாகத்தில் சிறப்பு செபமாலை வழிபாட்டுப்பவனி

செபமாலை வழிபாடானது, உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலரான கர்தினால் மாரியோ கிரேக் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

அக்டோபர் 7 சனிக்கிழமை தூய செபமாலை அன்னைத் திருவிழாவை முன்னிட்டு வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் மெழுகுதிரி ஏந்திய செபமாலை வழிபாடானது கர்தினால் மாரியோ கிரேக் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

செபமாலை அன்னைக்கு சிறப்பான விதத்தில் ஒப்புக் கொடுக்கப்பட்ட மாதம் மற்றும் உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறும் மாதமாகிய இந்த அக்டோபர் மாதத்தில் தூய பேதுரு பெருங்கோவில் திருப்பயணிகளின் பக்தி முயற்சியை அதிகரிக்கும் விதமாக இம்மாதத்தின் எல்லா சனிக்கிழமைகளிலும் உரோம் உள்ளூர்  நேரம் இரவு 9 மணிக்கு சிறப்பு செபமாலை வழிபாடு நடைபெற உள்ளது.

அக்டோபர் 7 சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் இரவு 9 மணிக்கு இந்திய இலங்கை நேரம் நள்ளிரவு 12.30க்கு நடைபெற உள்ள இந்த செபமாலை வழிபாடானது, உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலரான கர்தினால் மாரியோ கிரேக் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

அன்னை மரியா மீதுள்ள பக்தி முயற்சியின் ஒரு பகுதியாகவும் உலக ஆயர்கள் மாமன்ற செயல்பாடுகள் நன்முறையில் நடைபெறவும் சிறப்பாக செபிக்க திருப்பயணிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தாலிய தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் இந்நிகழ்வானது நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றது.  

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 அக்டோபர் 2023, 08:21