தேடுதல்

ரோஹிங்கியா புலம்பெயர்ந்தோர் ரோஹிங்கியா புலம்பெயர்ந்தோர்   (AFP or licensors)

ரோஹிங்கியா புலம்பெயர்ந்தோர்மீது உலகம் அதிக ஒன்றிப்பைக் காட்ட வேண்டும்!

புலம்பெயர்ந்தோர் நாடற்றவர்களாகவும் உதவியை நாடுபவர்களாகவும் உள்ளனர், இது அதிகம் குறைந்துள்ளது. ஐ.நா.வின் 93.4 கோடிக்கான ஆண்டு பட்ஜெட்டில் 38 விழுக்காடு மட்டுமே நிதியளிக்கப்படுகிறது : கர்தினால் மைக்கேல் ஷெர்னி.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உதவி மற்றும் பன்னாட்டுக் கவனத்தின் வீழ்ச்சிக்கு மத்தியில் வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்கியா புலம்பெயர்ந்தோருடன் அதிக அளவிலான உலகளாவிய ஒன்றிப்புக்கு அழைப்பு விடுத்தார் வத்திக்கானின் ஒருங்கிணைந்த மனித மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான திருப்பீடத்துறையின் தலைவர்  கர்தினால் மைக்கேல் பெலிக்ஸ் ஷெர்னி.

நவம்பர் 1 முதல் 5 வரை காக்ஸ் பஜாருக்கு அவர் மேற்கொண்ட பயணத்தின் போது, ​​ரோஹிங்கியா குடும்பங்களைச் சந்தித்தார். அப்போது காரித்தாஸ் பங்களாதேஷ் நிறுவனத்தின் கற்றல் மையத்தைப் பார்வையிட்டு  அவர்களுக்கு வீட்டுப் பொருட்களை வழங்கினார்.

மேலும் உடல்நலம், கல்வி மற்றும் சமூக மதிப்புகளை மேம்படுத்துவதற்காக காரித்தாஸ் நிறுவனத்தை பாராட்டிய ஷெர்னி அவர்கள், இவை எதிர்கால தாய்நாட்டிற்குத் திரும்புவதற்கான "நம்பிக்கையின் விதைகள்" என்று விவரித்தார்.

மியான்மாரில் ஏற்பட்ட புதிய  மோதல்கள் காரணமாக கடந்த 2024-ஆம் ஆண்டு முதல் மேலும் 1,50,000 பேர் புதிய புலம்பெயர்ந்தோராக வந்து கொண்டிருப்பதாலும், ஏறத்தாழ 12 இலட்சம் ரோஹிங்கியாக்கள் தொடர்ந்து நெரிசலான முகாம்களில் வசித்து வருவதாலும், உலகம் அவர்களுக்கு குறைவாக அல்ல, அதிக ஒன்றிப்பைக் காட்ட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

புலம்பெயர்ந்தோர் நாடற்றவர்களாகவும் உதவியை நாடுபவர்களாகவும் உள்ளனர், இது அதிகம் குறைந்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், ஐ.நா.வின் 93.4 கோடிக்கான ஆண்டு வரவு செலவு பட்டியலில் 38 விழுக்காடு  மட்டுமே நிதியளிக்கப்படுகிறது என்றும், இந்தப் பற்றாக்குறை புலம்பெயர்ந்தோரிடையே  குற்றம், சுரண்டல் மற்றும் வன்முறை ஆபத்துகளை அதிகரிப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 நவம்பர் 2025, 15:52